சுருக்கெழுத்தாளர் தேர்வு: தென்மண்டலத்திலிருந்து 55,854 பேர் பங்கேற்பு

மத்திய பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) 2017-ஆம் ஆண்டுக்கான சுருக்கெழுத்தாளர் தேர்வை (கிரேடு சி மற்றும் டி) வரும் 11ஆம் தேதி முதல் 14 வரை நடத்த உள்ளது. கணினி வழியில் நடைபெறும்
Updated on
1 min read

மத்திய பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) 2017-ஆம் ஆண்டுக்கான சுருக்கெழுத்தாளர் தேர்வை (கிரேடு சி மற்றும் டி) வரும் 11ஆம் தேதி முதல் 14 வரை நடத்த உள்ளது. கணினி வழியில் நடைபெறும் இத்தேர்வில் தென்மண்டலத்திலிருந்து 55,854 பேர் பங்கேற்க உள்ளனர்.
இது குறித்த விவரம்: ஆறு நகரங்களில் உள்ள 26 மையங்களில் இத்தேர்வு நடைபெறும். சென்னை, மதுரை, புதுச்சேரி, ஆந்திரத்தில் குண்டூர், விஜயவாடா, விசாகப்பட்டினம், ஹைதராபாத் ஆகிய இடங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. சுருக்கெழுத்தாளருக்கான தேர்வு இரண்டு அமர்வுகளாக நடைபெறும். காலை - 10 மணி முதல் நண்பகல் 12 வரையும், பின்னர் பிற்பகல் 2.45 முதல் மாலை 4.45 வரையும் நடைபெறும்.
தேர்வு எழுதுவோருக்கு வசதியாக எஸ்.எஸ்.சி. யின் தென் மண்டல அலுவலகம் தேதி, நேரம், தேர்வு நடைபெறும் நகரம் குறித்து தனது இணையதளத்தில் ஜ்ஜ்ஜ்.ள்ள்ஸ்ரீள்ழ்.ஞ்ர்ஸ்.ண்ய் முன்கூட்டியே அறிவித்துள்ளது. இந்த இணைய தளத்தில் இருந்து, தேர்வு நடைபெறுவதற்கு ஏழு நாட்கள் முன்னர் மட்டுமே தேர்வு எழுதுவோர் தங்களின் மின்னணு நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தத் தகவல், தேர்வு எழுதுபவர்கள் தங்கள் மின்னணு விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருக்கும் செல்லிடப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு, எஸ்.எம்.எஸ் மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கப்படும். 
மின்னணு நுழைவு சீட்டுகள் மற்றும் அசல் அடையாள அட்டை இல்லாமல் தேர்வு எழுதுவதற்கு அனுமதி வழங்கப்படாது. தேர்வு எழுத உள்ள அனைத்து நபர்களும் தங்களின் மின்னணு நுழைவு சீட்டுகளை தங்களின் தேர்வு எழுதும் தேதிக்கு ஏழு நாட்கள் முன்பு பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மேலும் விவரங்களுக்கு எஸ்.எஸ்.சி.யின் தென்மண்டல அலுவலகத்தின் 044-28251139, 9445195946 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com