வியர்வை நாற்றம் வராது. சருமமும் மிருதுவாக இருக்க இதை முயற்சி செய்து பாருங்கள்!

தேங்காய் எண்ணெய் குளிர் காலங்களில் உறைந்துவிடாமல் இருக்க, கல் உப்பை சிறிது போட்டு வைத்தால் உறையாமலும் , கெடாமலும் இருக்கும்.
வியர்வை நாற்றம் வராது. சருமமும் மிருதுவாக இருக்க இதை முயற்சி செய்து பாருங்கள்!
  • தேங்காய் எண்ணெய் குளிர் காலங்களில் உறைந்துவிடாமல் இருக்க, கல் உப்பை சிறிது போட்டு வைத்தால் உறையாமலும் , கெடாமலும் இருக்கும்.
  • ரசப்பொடிக்கு அரைக்கும்போது கொஞ்சம் வெந்தயம் சேர்த்தால் ரசத்தின் மணம் தூக்கலாக இருக்கும்.
  • வேலைக்குச் செல்லும் இல்லத்தரசிகள் ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் மிளகு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை இவற்றை மிக்ஸியில் பொடியாக அடித்து வைத்துக் கொண்டால் காய்கறி பொரியல், கலந்த சாதம் போன்றவற்றுக்கு அவசரத்துக்கு உதவும்.
  • வதக்கல், ரோஸ்ட் எது செய்தாலும் தாளிதம் செய்வதற்கு முன் எண்ணெய்யில் தேவையான உப்பில் பாதி சேர்த்து வதக்கினால் வாணலியில் ஒட்டவே ஒட்டாது. எண்ணெய் குறைவாகவே பிடிக்கும். மேலும், விரைவாகவும் வதங்கிவிடும். 
  • சட்னி வகைகளில் கொத்துமல்லி, புதினா, தக்காளி இவற்றில் எது மீந்தாலும், கோதுமை மாவு சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி அல்லது பரோட்டா செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
  • கிடாரங்காயைக் கொதிக்கும் வெந்நீரில் வேக வைத்து ஆறியவுடன் விதைகளை நீக்கி மிக்ஸியில் அரைத்து மாங்காய் தொக்கு போன்று செய்யலாம். சூப்பர் சுவையாக இருக்கும்.
  • ஜவ்வரிசி வடாம் செய்யும்போது எலுமிச்சைச் சாறுக்கு பதிலாக புளித்த மோர் விட்டுச் செய்தால் சாப்பிடும்போது நசுக் நசுக் என்று பல்லிடுக்கில் மாட்டாது. வெள்ளையாக இருப்பதுடன் வாசனையும் நன்றாக இருக்கும்.
  • சப்பாத்தி இடும்போது மேல் மாவு மீந்துவிட்டால் கைப்பட்ட மாவு என்பதால், அதைத் திரும்ப மாவு டப்பாவில் போடாமல் தனியே சிறிய டப்பாவில் போட்டு உபயோகப்படுத்தவும். இல்லையென்றால் சீக்கிரமே மாவில் வண்டுவந்து விடும்.
  • பாசுமதி அரிசியை அரைகுறை ரவையாக மிக்ஸியில் உடைத்து பால் பாயசம் செய்தால் நன்றாக வெந்து விடும். வாசனையும் அருமையாக இருக்கும்.
  • வெளியூர் செல்லும்போது தோசை, ஊத்தப்பம் போன்றவற்றை லேசாகத் தண்ணீர் தடவி பிறகு பேக் செய்தால் வறண்டு போகாமல் மிருதுவாகவே இருக்கும். 
  • வடாம் மாவில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டுக் கிளறினால் வடாம் பொரிக்கும்போது நல்ல வாசனையாக இருக்கும்.
  • வசம்பு, ரோஜா இதழ், வெட்டிவேர், கோரைக்கிழங்கு இவற்றை 100 கிராம் வீதம் வாங்கி ஒரு கிலோ பச்சைப் பயிறுடன் காயவைத்து அரைக்கவும். இதை குளியல் சோப்புக்கு பதிலாக பயன்படுத்தினால் வியர்வை நாற்றம் வராது. சருமமும் மிருதுவாக இருக்கும்.
  • ஒரு பாக்கெட் டயரியில் தினமும் நாம் வாங்க வேண்டிய பொருள்கள், செய்ய வேண்டிய வேலைகள் இவற்றை எழுதி வைத்துக் கொண்டால் அதன்படி நாம் எல்லாவற்றையும் மறக்காமல் செய்து முடிக்கலாம்.
  • சின்னத் துண்டு கறுப்பு எமரி பேப்பரில் சோப்புத் தூள் போட்டு வாஷ்பேசின், பாத்ரூம் டைல்ஸ்களைத் தேய்த்துக் கழுவினால் எந்த கறையும் இருக்காது. புதிது போல் மின்னும்.
  • காரில் செல்லும்போது பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை எடுத்துச் செல்லக் கூடாது. இஞ்சின் சூடு காரணமாக பிளாஸ்டிக்கில் உள்ள நச்சுப் பொருள்கள் தண்ணீரில் கலந்துவிடும் அபாயம் உண்டு.
  • அலமாரியின் உட்பக்கத்தில் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அடித்தால் நல்ல வெளிச்சமாக இருக்கும். துணிகளை எடுப்பதும் எளிது. இருட்டைத் தேடிவரும் பூச்சிகளும் சேராது.

- கீதா ஹரிஹரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com