சுக்கு, மிளகு, திப்பிலி சாதம்
தேவையான பொருட்கள்
சுக்கு - ஒரு துண்டு
வெள்ளை மிளகு - 2 தேக்கரண்டி
திப்பிலி - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
வெள்ளை வெங்காயம் - 2
பூண்டு - 5 பல்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மசாலாத் தூள் - அரை தேக்கரண்டி
செய்முறை
முதலில் சுக்கு, மிளகு, வெள்ளை மிளகு, கறிவேப்பிலை அனைத்தையும் வறுத்து நன்றாக அரைத்து விழுதாக்கி வைத்துக் கொள்ளவும்.
பிறகு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும். அத்துடன் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள விழுதையும், பூண்டையும் ஒன்றாக சேர்த்து வதக்கி அதனுடன் உப்பு, மஞ்சள், மசாலாத் தூள் சேர்த்து மஞ்சள் வாசனை போகும் வரை எண்ணெய்யில் தண்ணீர் விடாமல் வதக்கிக் கொள்ளவும்.
தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com