வெந்தயக் கீரையில் இவ்வளவு நன்மைகளா!

கொத்துமல்லி விதைகளை ( தனியா) ஊற வைத்த நீர் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின்  அளவை  கட்டுப்படுத்தும்.
வெந்தயக் கீரையில் இவ்வளவு நன்மைகளா!

தனியா

கொத்துமல்லி விதைகளை ( தனியா) ஊற வைத்த நீர் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின்  அளவை  கட்டுப்படுத்தும்.  சர்க்கரை  நோய்  உள்ளவர்கள்  இந்த தண்ணீரை  தினமும்  குடிக்கலாம்.

வெள்ளைப் படுதல் பிரச்னையில் அவதிப்படும் பெண்கள், கொத்துமல்லி விதைகளை ஊற வைத்த, நீரை வாரத்தில் இரண்டு  முறை குடித்து  வருவது நல்லது.

கொத்துமல்லி  விதைகளை நீரில்  போட்டு  கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி தேன் கலந்து  குடித்து வந்தால்  ரத்தசோகை பிரச்னையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

வெந்தயக்கீரை

உடல் சூடு  உள்ளவர்கள்  வெந்தயக்கீரையை  சாப்பிட வேண்டும்.  இதன் குளிர்ச்சி  உடல்  சூட்டை  குறைத்து   உடலில் குளிர்ச்சியை  உண்டாக்கும்.

கபம்,  சளி  உள்ளவர்கள்   வெந்தயக்கீரையை  தொடர்ந்து சாப்பிட்டால் குணமடைவர்.

வெந்தயக்கீரையை தினந்தோறும்  உணவில்  சேர்ப்பதால் உடலில்  ஏற்படும் புரத குறைபாட்டை நீக்கி  உடலுக்கு  வலிமை  சேர்க்கும். மேலும்  கண் பார்வை குறைபாடு நோய்கள்  இருப்பவர்கள்  வெந்தயக்கீரையை  தொடர்ந்து சாப்பிட்டால்  கண் பார்வை  அதிகரிக்கும்.

வெந்தயக்கீரை  நரம்பு  தளர்ச்சியிலிருந்து  மீண்டு  வர உதவும்.

-  தி.பிரேமா, திருச்சி

ஆரஞ்சு

ஆரஞ்சுப் பழத்தை  சாப்பிட்டதும்  அது உடனடியாக ரத்தத்தினால் உறிஞ்சப்படுகிறது.  அதனால்  உடனடியாக  உடலுக்குத் தேவையான  சக்தி கிடைத்து விடுகிறது.

இரவில்  தூக்கமில்லாமல்  அவதிப்படுபவர்கள்  தூங்கப் போகும்முன் ஆரஞ்சு சுளைகளை   சாப்பிட்டு வந்தால் அதில் இருக்கும் கால்சியத்தால்  நன்கு தூக்கம் வரும்.

ஒரு ஆரஞ்சுப் பழம்  1 கப் பாலுக்கு இணையானது.  இந்தப் பழத்தை அப்படியே  சாப்பிடும்போது  அதில் உள்ள நார்ச்சத்து  முழுமையாக நமக்கு கிடைக்கும்.

காலை எழுந்ததும் வெறும் வயிற்றில்  ஒரு ஆரஞ்சுப் பழத்தையும், இரவு படுக்குமுன்  ஒரு பழத்தையும்  சாப்பிட்டு வந்தால் பல் சம்பந்தமான வியாதிகள் குணமாகும்.

சாப்பாட்டிற்கு பிறகு ஆரஞ்சு சுளைகளை சாப்பிட்டால் விரைவில் ஜீரணமாகும்.

இதய நோய் உள்ளவர்கள்,  ஆரஞ்சு பழங்களை சாறாகப் பருகும்போது விரைவில்  அதிலுள்ள சத்துகள் உடலுக்குப் போய்ச் சேரும்.

- சி.ஆர்.ஹரிஹரன், கொச்சி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com