சளி, இருமல், படுக்கையில் சிறுநீர் கழிதல் போன்ற குறைபாடுகள் நீங்க

வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன
சளி, இருமல், படுக்கையில் சிறுநீர் கழிதல் போன்ற குறைபாடுகள் நீங்க

காய் : தேங்காய் + பேரீச்சை

சத்துக்கள் : வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன

தீர்வு

தேங்காய்  துருவல் (1 மூடி)
பேரீச்சை கொட்டை நீக்கியது
(100 கிராம்)
தேன் (50 மி.லி)
ஏலக்காய் (2)
கொத்தமல்லித் தழை (ஒரு கைப்பிடி)

செய்முறை : முதலில் தேங்காயை துருவி வைத்துக்கொண்டு பின்னர் பேரீச்சையை நறுக்கி இரண்டையும் ஒன்றாக கலந்து மிக்ஸியில் போட்டு அதனுடன் ஏலக்காய்,  மல்லித்தழை, தேன் இவை மூன்றையும் சேர்த்து   அரைத்து விழுதாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை மதியம் இரவு என மூன்று வேளையும் நெல்லிக்காய் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல், படுக்கையில் சிறுநீர் கழிதல் குறைபாடு நீங்கும்.

மாதுளம் செடியின் பட்டையை காயவைத்து பொடித்து வைத்துக் கொண்டு அவற்றில் 10 கிராம் பொடியை எடுத்து 50 கிராம் தேனை கலந்து அதனுடன் நெல்லிக்காய் மற்றும் கருஞ்சீரகம் தலா 25 கிராம் எடுத்து அரைத்து அதனுடன் கலந்து வைத்துக்கொண்டு  தினமும் காலை மாலை என இருவேளையும் 5 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் படுக்கையில் சிறுநீர் கழிதல் குறைபாடு நீங்கும்.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com