கட்டிப் பிடித்தல் மனிதர்களுக்கு நல்லதா?

கட்டிப் பிடித்தல் மனிதர்களுக்கு நல்லதா?

மற்றபடி கட்டிப்பிடித்தல் என்பதில் பலவிதமான உணர்வுகள் கடத்தப்படுகின்றன. அது ஒவ்வொரு உறவுக்கும் ஏற்றபடி உணர்வு ரீதியாக பல்வேறு விதமான உணர்வுகளைத் தரக்கூடியது. 

தமிழ்க் கலாசாரத்தில் பெரியோரைக் கண்டால் காலில் விழுந்து வணங்குதல் என்பது தொன்று தொட்டு புழங்கி வரும் மரியாதைக்குரிய பழக்கங்களில் ஒன்றாகத் தொடர்கிறது. அதை இன்று பலர் பின்பற்றுகிறார்களோ இல்லையோ, இந்தக் கட்டிப்பிடி கலாசாரத்தை மட்டும் மிக நன்றாகவே பழகிக் கொண்டு விடாமல் பின்பற்றி வருகிறார்கள். உண்மையில் இது நல்ல பழக்கம் தான் என்கிறது அயல்நாட்டு ஆய்வு ஒன்று. 

நம்மூரில் யாரெல்லாம் கட்டிப்பிடிக்கலாம் என்றொரு வரம்பு இருக்கிறது?

அம்மா தன் குழந்தைகளைக் கட்டிக் கொள்ளலாம், கணவன், மனைவி தனியறையிலோ அல்லது இப்போதெல்லாம் ஜாலியாக பொதுவெளியிலும் கூட விரசபாவமின்றி கட்டிக் கொள்ளலாம். 
காதலனும், காதலியும் சினிமாவில் மாத்திரம் கட்டிக் கொள்ளலாம். இப்படியெல்லாம் கட்டிப்பிடிப்பதில் வரம்புகள் இருந்தாலும் கூட அதையெல்லாம் தூக்கிக் கடாசி விட்டு தங்களது மனம் போனபடி யாரும், யாரையும் கட்டிக் கொள்ளலாம் என்று இயங்குபவர்கள் பெருகிக் கொண்டிருக்கும் சமூகமாக இப்போது மாறிக் கொண்டிருக்கிறது நமது தமிழ் சமூகம். 

மற்றபடி கட்டிப்பிடித்தல் என்பதில் பலவிதமான உணர்வுகள் கடத்தப்படுகின்றன. அது ஒவ்வொரு உறவுக்கும் ஏற்றபடி உணர்வு ரீதியாக பல்வேறு விதமான உணர்வுகளைத் தரக்கூடியது. 

காதலன் தன் காதலியை ஆசையோடு கட்டிக் கொள்வதற்கும், கணவன் தன் மனைவியை உரிமையுடனும், அன்பார்ந்த பிணைப்புடனும் கட்டிக் கொள்வதற்கும், பிள்ளைகள், பெற்றோரை குதூகலத்துடன் கட்டிக் கொள்வதற்கும், நண்பர்களுக்குள் துன்பகாலங்களிலும், பெரும் மகிழ்ச்சிக்காலங்களிலும், எப்போதும் உன்னுடன் நான் இருக்கிறேன் எதற்கும் கவலைப்படாதே எனும்படியான உணர்வைத் தரும் கட்டிப்பிடித்தலுக்கும் உணர்வு ரீதியாக வித்யாசங்கள் இருப்பினும் அவற்றின் அடிப்படை தேவை ஒன்றே! ஆம், மனிதர்களுக்கு உடல் ரீதியாகவும் சரி மன ரீதியாகவும் சரி ஒரு ஆதரவு தேவைப்படுகிறது. அந்த ஆதரவு உணர்வைத் தரும் அம்சங்களில் கட்டிப்பிடித்தல் முதன்மையானது.

நமக்கு நெருக்கமான நபர், அது கணவராக இருக்கலாம், பெற்றோராக இருக்கலாம் அல்லது நமது குழந்தைகளாகவே கூட இருக்கலாம். அவர்களை அவ்வப்போது சமயம் கிடைக்கும் போதெல்லாம் கட்டி அணைத்துக் கொண்டு உங்கள் மனதில் இருப்பதை பகிருங்கள். அப்படிப் பகிர்ந்து கொள்ளும் போது நமது மன இறுக்கம் தளர்ந்து மிக லேசாக உணர முடியும். அத்துடன் நாணயத்திற்கு இரு பக்கம் என்பது போல நமது ஆழ்மனதில் நன்மைக்கு வெகு நெருக்கமாக உறங்கியவாறு எப்போதடா எழுந்து வெடிப்போம் என்று காத்திருக்கும் தீமை எண்ணங்கள் அதாவது எதிர்மறை எண்ணங்கள், அவ நம்பிக்கைகள், முயற்சியின்மைகள், தாழ்வுணர்ச்சிகள் என எல்லாவற்றையும் அடித்துத் தவிடுபொடியாக்கி வெளியேற்றும் சக்தியும் கட்டிப்பிடித்தலுக்கு உண்டு என்கிறார்கள் பிட்ஸ்பர்க் கார்னகி மெலன் பல்கலைக்கழக மனநல மருத்துவர்கள்.

அத்துடன் மனிதர்களிடையே உறவு பலப்படவும் கட்டிப்பிடித்தல் உதவுகிறதாம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com