சித்த மருத்துவத்தில் கலிக்கம் மற்றும் நசியம் என்றால் என்ன?

இன்றைய நவீன காலத்தில் ஆன்மிகமும், மருத்துவமும் இன்று பல்வேறு நிலைகளை தொட்டுவிட்டது.
சித்த மருத்துவத்தில் கலிக்கம் மற்றும் நசியம் என்றால் என்ன?

இன்றைய நவீன காலத்தில் ஆன்மிகமும், மருத்துவமும் இன்று பல்வேறு நிலைகளை தொட்டுவிட்டது. இருப்பினும் நாம் தத்தளித்து கொண்டிருக்கின்றோம். என்னதான் நவீன யுகம் வந்தாலும் நம் பாரம்பரியம் மற்றும் பண்பாடே நம்மை முன்னேற்ற பாதையில் இட்டு செல்லும். இந்தப் பதிவின் மூலம் நாம் சித்த மருத்துவத்தின் இரு வகையான மருத்துவ முறைகளை காண இருக்கின்றோம். அவை முறையே கலிக்கம் மற்றும் நசியம் என்பது ஆகும்.

கலிக்கம் - தோல் நோய்களுக்கு கண்கள் வழியாக மருந்து அளித்தல்

வீட்டில் உள்ள பேரில் பாதிப் பேராவது கண்ணாடி போடாமல் இருப்பதில்லை. காரணம் ஈரல்,  மண்ணீரல்,  சிறு நீரகம்  ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளும், குற்றங்களும், நஞ்சுகளும்!!!

கலிக்கம் என்பது சித்த மருத்துவத்தில் கண்ணில் மருந்திட்டு நோய் போக்கும் முறையாகும். சித்தர்  பாரம்பரியமாக  கையாண்டு வந்த சில அரிய மூலிகை சாற்றை கண்ணில் விடுவதால் விஷக்கடி, தேமல், வெண்படை, கரும்படை, சொரியாஸிஸ் மற்றும் அனைத்து தோல் நோய்களும் தீருகிறது. தோல் நோய் உள்ளவர்கள் முசக்காத்தான் இலை, குப்பைமேனி இலை, வேப்பிலைமூன்றும் சம அளவில் வைத்து 10 மிளகுடன் அரைத்து 2 நாளைக்கு ஒரு தடவை இரவில் பூசிக்கொள்ள வேண்டும்.

அவசியம் அசைவம். கத்தரிக்காய், புளி தவிர்க வேண்டும். ஒருவர் மூன்றுமுறை மருந்திட்டு நோய் நீக்கம் பெறலாம். திண்டுக்கல் சித்த வைத்தியர் கயிலை முத்துக்கிருஷ்ணன் அவர்கள் இந்த சேவையை தம் தந்தையாரின் காலத்திலிருந்து இலவசமாக செய்து வருகிறார்கள் . தற்போது அருட்தந்தை வேதாத்தரி  மகரிஷி  அவர்களின்  அருளாசியோடு மாதம் முழுவதும் இந்த சேவையை அனைத்து மன்றங்களிலும் மனநிறைவோடு ஆற்றி வருகிறார்கள். கண்ணில் போடும் கலிக்க மருந்துகளால், உடலில் உள்ள ராஜ கருவிகளான ஈரல், மண்ணீரல், சிறு நீரகம் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளும், குற்றங்களும், நஞ்சுகளும் நீங்கி உடல் நோயினின்றும் நீங்கி புத்துணர்வு பெறும்.

இந்தக் கண்ணில் விடும் மருந்துகள் கண்ணில் உள்ள நோய்களைக் குணமாக்குவதோடு,இரத்த ஓட்டத்தில் உடனடியாகக் கலப்பதன் மூலம்

1) உடலில் ஏறிய விஷம்,
2) வர்மம்,
3) வாதம் 80,
4) நெடு மயக்கம்(கோமா),
5) மூளையில் ஏற்படும் இரத்த உறைவு(அதன் மூலம் ஏற்படும் பக்க வாதம்)

ஆகியன தீரும்.

நாங்கள் சைதாப்பேட்டை மனவளக்கலை மன்றத்தில் இந்த மருத்துவ முறையை கடந்த 3 முறை செய்து உள்ளோம். இந்த சேவையில் சைதை மன்றத்தின் பணி பற்றிச் சொல்வதற்கு வார்த்தை இல்லை. நேர்த்தியான அணுகுமுறையில் மாதம் முதல் ஞாயிறு அன்று இந்த இலவச சேவை நடைபெற்று வருகின்றது. தற்போது ஐயா முத்துக்கிருஷ்ணன் அவர்களின் மகன் திரு சதிஷ் ஐயா இந்த சேவையை ஆற்றி வருகின்றார்கள். எனவே அன்பர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் உடல் நலம் காக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.  

நசியம்-  மூக்கிற்கு மருந்து இடுதல் 

மூக்கில் இடும் முக்கிய நசிய (மூக்கிலிடும் மருந்து) மருந்தை இங்கே காண்போம்.

நசியம் என்பது மூக்கிற்கு மருந்திடுவதாகும். இரு மாதங்களுக்கு ஒரு முறை இட வேண்டுமென சித்தர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் வள்ளலார் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது இட வேண்டும் எனக் கூறுகிறார்.

இவ்வாறு முறையாக நசியம் செய்து வந்தால் தலைக்கனம், தலைவலி, கழுத்து வலி, நரம்பு வலி, வாய்க் கோணுதல் போன்ற வாதம் (முக வாதம்), பக்க வாதம், காக்காய் வலிப்புப் போன்ற கடுமையான நோய்கள் நம்மை அணுகா, வேலைப் பழுவினாலும் வரும் கோபம், பரபரப்பு, போன்ற உணர்வுகளாலும் தலைவலியில் மன இறுக்கம் (STRESS) உண்டாகிறது.

இதனால் பலவித பிணிகள் உண்டாகின்றன. பிணிகளில் 70% மன இறுக்கத்தினால் உண்டாகின்றது. ரத்த அழுத்தம், இருதய நோய் சம்பந்தமான வியாதிகளும் மன இறுக்கத்தினால்தான் உண்டாகின்றன. மன இறுக்கம் தலைப்பாகத்தில் உண்டாக்கும் வெப்பத்தினால் (காப்பி, டீ, குளிர் பானங்கள் குடிப்பதனாலும், வெந்நீரில் குளிப்பதனாலும், இதே விளைவுகள் உண்டாகின்றன.) ரத்தக் குழாய்களின் கன பரிமாணம் (DENSITY) மாறுபட்டு அவைகளின் சுருங்கி விரியும் (ELASTICITY) தன்மை பாதிக்கப்படுகின்றது.

அலோபதி மருத்துவர் நோயாளர் அவரிடம் சென்றால் என்ன செய்கிறது என்று நோயாளரிடம் கேட்பார். ஆனால் ஒரு தேர்ந்த சித்த மருத்துவர் (எனெனில் நன்கு நாடிப் பரிசோதனையில் தேர்வதற்கே குறைந்தது நான்கு வருடங்கள் ஆகும்) உங்களுக்கு இதெல்லாம் செய்கிறதா? இந்த வகை நோய் இருக்கிறதா? உடலின் இந்த இடத்தில் பிரச்னை என்பதை புட்டு புட்டு வைப்பார். நாடிப் பரிசோதனையில் கால் பங்கு வியாதி, சித்த மருத்துவரிடம் வந்துவிடும். மேலும் அரைப் பங்கு மருந்தால் தீரும். மீதமுள்ள கால் பங்கு செய்யும் தர்மத்தால்தான் தீரும் என்று அகத்தியர் கூறுகிறார். 

சுருங்க கூறின், 45 நாள்களுக்கு ஒரு முறை நசியம் (மூக்கில் மருத்துவம் மேற்கொள்ளும் முறை) செய்ய வேண்டும். மூக்கிற்கும், மூலாதாரத்திற்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் கருவாய், எருவாய், மலவாய் சம்பந்தமான தொந்தரவுகள் நீங்குகின்றன. கட்டி, கழலை ஹார்மோன் சுரப்பில் மாறுபாடு, ஒற்றைத் தலைவலி போன்றவை இந்த சிகிச்சை முறையால் குணப்படுத்தலாம்.

இந்த நசியம் சிகிக்சை முறையானது சைதாப்பேட்டை மனவளக்கலை மன்றத்தில் மாதத்தில்  மூன்றாம் ஞாயிறு அன்று நடைபெற்று வருகின்றது. வாய்ப்புள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளவும்.

இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களின் உடல் நலம் மேம்படுத்த வேண்டுகின்றோம். சில விஷயங்கள் கோடி ருபாய் கொடுத்தாலும் கிடைக்கப் பெறா. அது போன்றதுதான் நமது சிகிச்சை முறை. இலவசம்தானே என்று நினைக்க வேண்டாம். நமக்கு இலவசமாக கிடைக்கின்றது. ஆனால் பின்புலத்தில் பொருளாதார உதவி தேவை. வாய்ப்புள்ள அன்பர்கள் தங்களால் இயன்ற காணிக்கையை செலுத்துவதும் நன்று.

- ராகேஷ் TUT

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com