சுடச்சுட

  

  இளம் வயதில் போதை! பின்னாளில்? அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை!

  By சினேகா  |   Published on : 15th March 2019 12:33 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  drink

   

  பருவ வயதிலேயே குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்களின் வாழ்க்கையில் பிற்பாதியில் அப்பழக்கம் அவர்களின் மனநிலையில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்திவிடும் என்கிறது அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வு. அமெரிக்காவில் (வாஷிங்டன் டி.சி.) மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு ‘பயோலாஜிகல் சைக்யாட்ரி’('Biological Psychiatry') என்ற பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

  இளம் வயதில் தொடங்கப்படும் அதிகப்படியான குடிப்பழக்கம் இளம் வயதினரின் மூளைத் திறனை பாதிப்பதுடன் நடுத்திர வயதில் அவர்களுக்கு அதிக கவலை, பதற்றம் மற்றும் கடுமையான உளவியல் சிக்கல்களையும் ஏற்படுத்திவிடும் என்று கூறுகிறது.

  குடிப்பழக்கத்தை பின்னர் சிலர் விட்டொழித்தாலும், அதன் பாதிப்புக்கள் நிச்சயமாகத் தொடரும், குறிப்பாக நடுத்தர வயதில் நரம்பியல் மற்றும் முதுகெலும்பு பிரச்னைகளை ஏற்படும் ஆபத்து உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

  இந்த ஆய்வு விலங்குகள் மீது நடத்தப்பட்டது. அதில், ‘இளம் வயதில் ஏற்படும் குடிப்பழக்கம் மூளை வளர்ச்சியை பாதிக்கும், குறிப்பாக உணர்ச்சிக் கட்டுப்பாடு இல்லாமை மற்றும் பதற்றம் அதிகரித்தல் போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும். ஆனால் அவை எந்த எந்த வழிகளில் என்பதை இன்னும் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், தெளிவாக இருப்பது என்னவெனில், எபிஜெனடிக் மாற்றங்கள் நீடித்திருக்கின்றன, வாழ்க்கையில் இளம் வயதில் குடிப்பழக்கம் ஏற்பட்டு பிற்பாடு அப்பழக்கத்தை நிறுத்திவிட்டால் கூட, அவர்களுக்கு உளவியல் சிக்கல்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கிறது’ என்று இந்த ஆய்வின் முதன்மை ஆராய்ச்சியாளர் சுபாஷ் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் டி.என்.ஏ, ஆர்.என்.ஏ, அல்லது மரபணுக்களின் செயல்பாட்டை மாற்றும் குரோமோசோம்களுடன் தொடர்புடைய குறிப்பிட்ட புரதங்கள் ஜீன்களில் செயல்பாடுகளில் மாற்றம் விளையும், ஆனால் ஜீன்களில் மாற்றம் இருக்காது. இத்தகைய ரசாயன மாற்றங்களைத்தான் எபிஜெனிடினிக்ஸ் குறிக்கிறது. மூளையின் இயல்பான வளர்ச்சிக்கு எபிஜெனிடிக் மாற்றங்கள் தேவைப்படுகின்றன, ஆனால் அவை ஆல்கஹால் மற்றும் மன அழுத்தம், சுற்றுச்சூழல் அல்லது சமூக காரணிகள் உள்ளிட்ட பல விஷயங்களால் மாறுபாடு அடையலாம்.  இந்த வகையான எபிஜெனிடிக் மாற்றங்களால் நோய் மற்றும் நடத்தை கோளாறுகள் ஏற்படும். 

  இதனை நிறுவ, பருவ வயது எலிகளை வைத்து ஒரு ஆய்வினை மேற்கொண்டனர். எத்தனால் (ஒரு வகை மது) எனும் ரசாயனத்தை பயன்படுத்தி முதல் வகை எலிகளுக்கு சலைன் மூலம் அதனை செலுத்தினர், இரண்டாம் வகை எலிகளுக்கு அதைச் செலுத்தாமலும் விடுத்து 14 நாட்களுக்கு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த இளம் எலிகள் அதீதமாக மது அருந்திய நிலைக்குட்பட்டது போன்று ரசாயனத்தால் போதைக்குட்பட்டன. அதன் பின் வந்த காலங்களில் அவற்றுக்கு எத்தனால் செலுத்தப்படவில்லை ஆனால் அவை முதிர்ச்சியடையும் காலம் வரையிலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருத்தப்பட்டன. முதல் வகை எலிகளின் வாழ்க்கையின் பிற்பகுதியில் பலவீனமாகத் தென்பட்டன. எத்தனால் பழக்கம் முற்பகுதியில் இளம் பருவத்திலேயே நிறுத்தப்பட்டிருந்தாலும் அந்த எலிகளுக்கு நரம்பியல் மாற்றங்கள் காணப்பட்டன. ஆனால் இரண்டாம் வகை எலிகளுக்கு எவ்வித மாற்றமும் இல்லை. அவை நார்மலாக இருந்தன. இத்தகைய நரம்பியல் மாற்றங்கள் தான் மனிதர்களில் உளவியல் சிக்கல்களுக்கு காரணியாக அமைகிறது என்கிறது இந்த ஆராய்ச்சி. இந்த ஆய்வு முடிவு கூறுவது இளம் வயதில் குடிப்பழக்கத்துக்கு உள்ளாவதால் வாழ்க்கையின் பிற்பகுதி முழுவதும் எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்படுவது, அதீதமான கோபம் கொள்வது, பதற்றம் அடைவது, மன அழுத்தத்துக்கு உள்ளாவது போன்ற பிரச்னைகளுக்கு ஏற்படும் என்கிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai