உடம்பிற்கு நல்ல வலிமையைத் தரும் சூப் இது!
By | Published On : 01st May 2019 04:10 PM | Last Updated : 01st May 2019 04:48 PM | அ+அ அ- |

கோடைக் காலங்களில், கிடைக்கும் பழங்களை நறுக்கி, பாலுடன் கலந்து சர்க்கரை சேர்க்காமல், தேன் 2 தேக்கரண்டி கலந்து, ப்ரூட் சாலட் ஆக மாலையில், குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் கொடுக்கலாம்.
கேரட்டை துருவி, வெள்ளரிக்காயையும் துருவி அதனுடன் நிலக்கடலை, முளைக்கட்டிய பயத்தம் பயறு, சோள முத்துக்கள் இவற்றை வேகவைத்து, பச்சை மிளகாய் ஒன்று மிகப் பொடியாக நறுக்கி சேர்த்து, உப்பும், பன்னீர்துருவல், தேங்காய்த் துருவல், சிறிது கொத்துமல்லி தழை கலந்து சாட் மசாலாவை 1 தேக்கரண்டி தூவி நன்றாக கலந்து வெஜிடபிள் பன்னீர் சாலட் ஆக மாலை நேரத்தில் கொடுக்கலாம். கோடையை குளிர வைக்கவும் மாலை நேர சிற்றுண்டியாக இருக்கும்.
இளம் முருங்கை கீரையை, ஆய்ந்து சுத்தம் செய்து, அரைத்து வடிகட்டி, முருங்கைச் சாறு எடுத்து அதை சிறிது கொதிக்க வைத்து, அத்துடன் உப்பு, பால், வெண்ணெய்ச் சேர்த்து மிளகுப் பொடி தூவி இரவு உணவுக்கு முன் சிறியோர் முதல் பெரியோர் வரை பருக, வாயுவை குறைத்து, உடம்பிற்கு நல்ல வலிமையைத்தரும் சூப் இது.
இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி இரண்டையும் உப்பு சேர்த்து, நெய்யில் வதக்கி சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வர, கோடை யினால் ஏற்படும், நாவறட்சி, கொப்புளங்கள் வராமல் தடுக்கும்.
எலுமிச்சம்பழத்தோலை துருவி குழம்பு, ரசம், பொரியல், கூட்டு இவற்றில் சேர்த்தால் அதிகப்படியான தாகம் எடுக்காது. சமையலின் சுவையும் கூடும். நன்கு செரிமானம் ஆகி பசியைத் தூண்டும்.
- கிரிஜா ராகவன்