சுடச்சுட

    

    ஹைபர் ஆக்டிவ் குழந்தைகளுக்கான ஆரோக்கிய டிப்ஸ்

    By கோவை பாலா  |   Published on : 09th May 2019 12:26 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Hyperactive-ADD-ADHD-Child


    வல்லாரைக் கீரைத் துவையல்

    தேவையான பொருட்கள்

    வல்லாரைக் கீரை - 100 கிராம்
    மிளகு - 10 கிராம்
    சின்ன வெங்காயம் - ஒன்று
    பூண்டு - 5 பல்
    பெருங்காயம் - இரண்டு சிட்டிகை
    மஞ்சள் - 5 சிட்டிகை
    உப்பு, நல்லெண்ணெய் - (தேவையான அளவு)

    செய்முறை : பெருங்காயம், மஞ்சள், உப்பு இவைகளைத் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் நல்லெண்ணெய் விட்டு வதக்கி அவற்றுடன் மற்ற பொருட்களையும் சேர்த்து அரைத்து துவையலாக்கி கொள்ளவும். 

    பலன்கள் : இந்த துவையலை வாரம் மூன்று முறையாவது வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களின் மூளைத் திறன் அதிகரிக்கும். மேலும் சில குழந்தைகள் அதிக சுறுசுறுப்பாக (Hyper Active)இருப்பார்கள். இவர்களை தொடர்ந்து ஒர் இடத்தில் பிடித்து வைக்க முடியாது. எதையாவது தேவையில்லாமல் பேசுவது , கோபப்படுவது, சண்டையிடுவது, காரணமின்றி அழுவது, நினைவாற்றல் குறைவது என இருப்பார்கள். இத்தகைய குழந்தைகளுக்கு வல்லாரைத் துவையல் மிகச் சிறந்த வரப்பிரசாதமாகும்.

    குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

    கோவை பாலா
    இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
    96557 58609 / Covaibala15@gmail.com

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai