ஆஸ்துமாவை விரட்டும் வெள்ளெருக்கு!

தெய்வீக மூலிகை எனப் போற்றப்படும் எருக்கு, வளமற்ற நிலங்கள், பராமரிக்கப்படாத வயல்கள், சாலையோரங்கள், சுடுகாடு என எங்கும் மனிதர்கள், பறவைகள், விலங்குகள் என யாருடைய உதவியும்
ஆஸ்துமாவை விரட்டும் வெள்ளெருக்கு!

தெய்வீக மூலிகை எனப் போற்றப்படும் எருக்கு, வளமற்ற நிலங்கள், பராமரிக்கப்படாத வயல்கள், சாலையோரங்கள், சுடுகாடு என எங்கும் மனிதர்கள், பறவைகள், விலங்குகள் என யாருடைய உதவியும் இல்லாமல் தன் இனத்தை தானே உற்பத்தி செய்து விளைபவை. பன்னிரண்டு ஆண்டுகள் வரை மழையே இல்லாவிட்டாலும்கூட உயிர்வாழும் ஆற்றல் கொண்டது தான் எருக்கு. 

மனிதர்களின் பலவிதமான நோய்களுக்கான தீர்வை தன்னுள் வைத்துக் கொண்டிருக்கும் இந்த வெள்ளெருக்கின் மருத்துவ குணங்களோ ஆச்சரியத்தை அளிப்பவை.  

கத்திரிப்பூ நிறப் பூக்களைக் கொண்ட எருக்குதான் பெரும்பாலான இடங்களில் இருக்கும். ஆனால், வெள்ளை நிறப் பூக்களை உடைய எருக்கு அரிதாக காணப்படும். இதை வெள்ளெருக்கு என்பார்கள். 

வெள்ளெருக்கன் பூவைக் காய வைத்துப் பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியில் 200 கிராம் எடுத்து, சிறிது சர்க்கரை சேர்த்து இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், பால்வினை நோய், தொழு நோய் குணமாகும். 

எருக்கன் வேரை கரியாக்கி, விளக்கெண்ணெய் கலந்து மேற்பூச்சாகப் பயன்படுத்தினால் கரப்பான், பால்வினை நோய்ப் புண்கள், ஆறாத காயங்கள் ஆறும். 

இதன் பால்... பொடுகு, படை, மூட்டுவலி, மூட்டுவீக்கம், மூலநோய்க்கு சிறந்த நிவாரணி என்கிறது சித்த மருத்துவம்.

வெள்ளை நிறப் பூ தான் பிள்ளையாருக்கு உகந்ததாக கருதப்படுகிறது.  இந்த எருக்கின் வேர்களில் பிள்ளையார் உருவங்களைச் செதுக்கி வழிபடுவார்கள். 

இந்த வெள்ளை எருக்கின் பூக்கள் ஆஸ்துமாவை விரட்டும் அருமருந்து. 

வெள்ளெருக்குப் பூக்களின் நடுநரம்பை நீக்கிவிட்டு, இதழ்களை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும். 

இதற்கு சம அளவு மிளகு, கிராம்பு சேர்த்து மை போல அரைத்து, மிளகு அளவுக்கான மாத்திரைகளாக உருட்டி, நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். 

மூச்சிரைப்பு அதிகமாகும்போது, இதில் ஒரு உருண்டையை வாயில் போட்டு நீர் அருந்தினால், உடனே இரைப்பு தணியும். '10 கிராம் இஞ்சி, 3 வெள்ளெருக்குப் பூக்கள், 6 மிளகு ஆகியவற்றை நசுக்கி, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு, கால் லிட்டராகும் வரை சுண்டக் காய்ச்சி தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால், இரைப்பு குறையும்’ என்கிறார்கள், சித்த மருத்துவர்கள்.

ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com