கொழுப்புச் சத்து குறைவான பாலைக் குடித்தால் இளமைத் தோற்றம்: ஆய்வு முடிவு

குறைந்த கொழுப்புள்ள பால் குடிப்பதற்கும் இளமைத் தோற்றத்துடன் இருப்பற்கும் இடையே கணிசமாக தொடர்பு இருக்கிறது
கொழுப்புச் சத்து குறைவான பாலைக் குடித்தால் இளமைத் தோற்றம்: ஆய்வு முடிவு

குறைந்த கொழுப்புள்ள பால் குடிப்பதற்கும் இளமைத் தோற்றத்துடன் இருப்பற்கும் இடையே கணிசமாக தொடர்பு இருக்கிறது என்று அண்மையில் ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை விடுத்துள்ளனர்.

ஆக்ஸிடேட்டிவ் மருத்துவம் மற்றும் செல்லுலார் லாங்கிவிட்டி எனும் இதழில் வெளியிடப்பட்ட, இந்த ஆய்வில், குறைந்த கொழுப்புச் சத்துள்ள பாலைக் குடிப்பவர்கள், அதிகக் கொழுப்புச் சத்துள்ள பால் குடிப்பவர்களைக் காட்டிலும் பல ஆண்டுகள் இளமைத் தோற்றத்துடன் இருப்பதாகக் கண்டறிந்துள்ளது.

"இந்த வித்தியாசம் எவ்வளவு வெளிப்படையாகத் தென்பட்டது என்பது ஆச்சரியமாக இருந்தது,  நீங்கள் அதிக கொழுப்புள்ள பாலைக் குடிக்கப் போகிறீர்கள் என்றால், அவ்வாறு செய்வது சில குறிப்பிடத்தக்க பின் விளைவுகளை உங்களுக்கு ஏற்படுத்தும் என்பதை நீங்கள் முதலில் அறிந்திருக்க வேண்டும்" என்று அமெரிக்காவிலுள்ள பிரிகாம் யங் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஆராய்ச்சியாளர் லாரி டக்கர் கூறினார். 

இந்த ஆய்விற்காக, டெலோமியர் நீளம் மற்றும் பால் உட்கொள்ளும் அதிர்வெண் (தினசரி பால் குடிப்பவர்கள் மற்றும் வாராந்திர அல்லது அதற்கும் குறைவானவர்கள்) மற்றும் உட்கொள்ளப்படும் பாலிலுள்ள கொழுப்புச் சத்தின் உள்ளடக்கம் (முழுமையாக அல்லது இரண்டு சதவீதம் / ஒரு சதவீதம் ) ஆகியவற்றுக்கு இடையிலான உறவை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.

டெலோமியர்ஸ் என்பது மனித குரோமோசோம்களின் நியூக்ளியோடைடு எண்ட்கேப்ஸ் ஆகும். அவை ஒரு உயிரியல் கடிகாரத்தைப் போலச் செயல்படுகின்றன, மேலும் அவை வயதுடன் மிகவும் தொடர்புள்ளவை. ஒவ்வொரு முறையும் ஒரு செல் புதுப்பிக்கப்படும் போது, ​​மனிதர்கள் சிறிய அளவில் இந்த பிட் எண்ட்கேப்பை இழக்கிறார்கள். எனவே, வயதானவர்களுக்கு அவற்றின் டெலோமியர் குறைவாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், அதிக கொழுப்புள்ள பாலை மக்கள் குடிப்பதால், அவர்களின் டெலோமியர் குறைவாக இருக்கும் என்று ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் பங்குகொண்ட முதியவர்கள் உட்கொள்ளும் பாலின் கொழுப்பில் ஒவ்வொரு சதவீத அதிகரிப்புக்கும் (இரண்டு சதவீதம் மற்றும் ஒரு சதவீதம் அளவில்), டெலோமியர் குறைவாக இருந்தன, இது  அவர்களின் உண்மை வயதை விட நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களைத் தோற்றம் கொள்ளச் செய்தது.

பால் குடிப்பவர்களின் ஆய்வுக் குழு ஆராய்ந்தபோது, ​​முழுச் சத்துடைய பாலை உட்கொண்ட பெரியவர்களுக்கு டெலோமியர்ஸ் குறைவாக இருந்தன, அதிலும் கொழுப்புச் சத்து நீக்கப்பட்ட பாலை குடிப்பவர்களைக் காட்டிலும் மிகக் குறைவாக இருந்தன. 

இந்த ஆய்வுக்காக கிட்டத்தட்ட பாதி பேர் தினமும் பால் குடித்தனர், மற்றொரு சாரார் குறைந்தது வாரத்திற்கு ஒரு முறை பால் குடித்தனர். 

இந்த முதியோர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் முழு கொழுப்பு (முழு) பால் உட்கொள்வதாகவும், மேலும் 30 சதவீதம் பேர் இரண்டு சதவீத பால் குடிப்பதாகவும் தெரிவித்தனர்.

இதற்கிடையில், 10 சதவீதம் பேர் ஒரு சதவீத பாலையும், 17 சதவீதம் பேர் பால் குடிக்காமலும் இருந்தனர். சுமார் 13 சதவீதம் பேர் எந்தப் பாலையும் குடிக்கவில்லை.

இந்த கண்டுபிடிப்புகள் அமெரிக்கர்களுக்கான உணவு வழிகாட்டுதல்களுக்காக (2015-2020) வடிவமைக்கப்பட்டது.  ஆரோக்கியமான உணவு உட்கொள்ள வேண்டும் என்பதன் ஒரு பகுதியாக, குறைந்த கொழுப்புள்ள பால், கொழுப்பு அல்லாத மற்றும் ஒரு சதவீத கொழுப்புள்ள பால், மற்றும் சுத்தமாக கொழுப்பு நீக்கப்பட்ட பால் ஆகியவற்றை உட்கொள்ள முதியோர்களுக்கு அறிவுறுத்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com