1. மாத்திரைகள் தேவையா?

ஒவ்வொரு மனிதனின் வெற்றியின் மறுபக்கம் வலிகள் நிரம்பியது. போராட்டம் நிரம்பிய
1. மாத்திரைகள் தேவையா?

ஒவ்வொரு மனிதனின் வெற்றியின் மறுபக்கம் வலிகள் நிரம்பியது. போராட்டம் நிரம்பிய வாழ்க்கையில் வலிகளும் நம்முடன் பயணித்து கொண்டேயிருக்கும். மன வலியை தாங்க நாம் எப்பொழுதும் நம்மை திடப்படுத்திக் கொண்டே வாழ்க்கையை வாழக் கற்றுகொள்கிறோம். 

ஒவ்வொரு தோல்வியும் நமக்கு கொடுக்கும் மனவலியை நம் மனம் எப்படி அனுபவப் பாடமாக கட்டமைத்து கொள்கிறதோ அதேபோல் உடலில் ஏற்படும் வலிகளுக்கும் நம் உடல் பல்வேறு சமயங்களில் மருத்துவத்தை தானே உருவாக்கி கொள்ளும். இதனை ஆங்கிலத்தில் SELF HEALING சக்தி என்பார்கள்.

நம் உடல் ஒரு நெறிபடுத்தப்பட்ட தன்மையுடன் இயங்கி கொண்டிருக்கிறது, உடலில் ஏற்படும் வளர்ச்சிதை மாற்றம் (METABOLISM) தொடர்பான வேதியல் மாற்றங்களின் போது ஏற்படும் வேதியியல் மாற்றக் கழிவுகள் அதனை வெளியேற்றும் வண்ணம் உள்ள உடல் உறுப்புக்கள் சார்ந்து தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும். (EXCREATION). இந்த உடல் இயக்கத்திற்கு தேவையான சக்தியை எப்படியாவது நம் உட்கொள்ளும் உணவுகள் மூலம் பெற்றுக்கொள்ளும். இந்த சிறப்பு கட்டமைப்பு எவராலும் தன்னிநிலைப் படுத்தி மாற்றியமைக்க முடியாது. இங்கே விளக்க போகும் வலிகள் தொடர்பான விளக்கங்கள் மூட்டு தோள்பட்டை முழங்கால் கணுக்கால் அதனை தொடர்ந்து இயங்கும் தசைபகுதிகள் அதில் ஏற்படும் வலிகள் சார்ந்தே இருக்கும்.

பிசியோதெரபி மருத்துவம் என்பது எலும்பு மற்றும் தசைகளில் ஏற்படும் வலிகள் அதில் ஏற்படும் காயங்கள் அதனைச் சார்ந்த இயக்க குறைபாடுகளை தனிப்பட சிறப்பான மருத்துவ முறைகளை கொண்டு மருந்துகள் இல்லாமல் குணப்படுத்தும்  மருத்துவ முறையாகும்.

நவீன மருத்துவ துறையில் சமீப காலத்தில் ஏற்பட்ட பல்வேறு அறிவியல் கேட்பாடுகளின் போது பிசியோதெரபி மருத்துவம் தனது இன்றியமையாத இடத்தை செவ்வனே பிடித்து கொண்டுள்ளது. இதற்கான முக்கிய காரணம் தொடர் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே வருவதும் முக்கிய காரணமாகும். நம் வாழ்க்கை பயணத்தில்  பல்வேறு சமயங்களில் வலிகள் நம்மை ஆட்கொண்டு அதற்காக மருந்துகளை பெரும்பாலும் உட்கொண்டு வலியை குணப்படுத்திக் கொண்டு ஓடிக்கொண்டேயிருக்கிறோம். ஆனால் நாம் ஒரு நிமிடம் செலவழித்து அந்த மருந்துகளுக்குள் இருக்கும் வேதியல் பொருள்களை பற்றி சிந்திருக்கிறோமா என்றால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்வோம்.

இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில், மக்கள் மீது திணிக்கப்படும் வலி நிவாரண மருந்துகள் கடுமையான பக்க விளைவுகளை இலவசமாக தந்து விட்டே செல்லும். நம் மீது ஏவப்பட்டு பரிசோதித்து (CLINICAL TRAIL) பார்க்கும் வண்ணம் தொடர் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டேயிருப்பது அவ்வப்போது செய்திகளில் நாம் படித்து வந்தாலும் அதனை போகிற போக்கில் விட்டுவிடுகிறோம். நம்மை பாதிக்க வரை எதையும் கணக்கில் எடுத்து கொள்வதில்லை. விழிப்புணர்வுடன் வரும் முன் தற்காத்துக் கொள்வது முக்கியம் என்பதை மறந்து விடுகிறோம்.

தசை எலும்புகள் சார்ந்த வலிகளுக்கும் நாம் உட்கொள்ளும், நம் பாஷையில் சொல்லவேண்டும் என்றால், மிகவும் பவர் குறைந்த மாத்திரைகளை தொடர்ந்து உட்கொண்டு வருவதால் சிறுநீரக தனது வேலை பளுவை அதிகமாக்க நேரிடும். இதன் விளைவாக ஏற்படும் சிறுநீரக செயல் இழப்பு இலவச நோயாக நம்மை பாதித்து கொண்டிருப்பது யாருக்குமே தெரியாது. இதனால் தான் சமீபத்திய மருத்துவ ஆய்வுகளில் மூலம் தாக்கல் செய்யப்பட்ட பதிவு என்னெவென்றால் சிறு உடல் வலிகளுக்கு மருத்துவரை அணுகுங்கள் ஆனால் அவர் தரும் ஆலோசனை பெற்று கொண்டு மருந்துங்கள் தேவைபட்டால் உண்ணுமாறும் தனது மக்களை அயல் நாடுகள் அறிவுறுத்துகின்றன. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் மூட்டு வலியாக இருந்தாலும் சரி முதுகு வலியாக இருந்தாலும் சரி ஒரு பக்கம் முழுவதும் எழுதி தரப்பட்ட மாத்திரை மருந்துகளை ஒரு மாதம் சாப்பிடச் சொல்லிவிடுவார்கள், மீண்டும் வலி தொடர்ந்தால் மீண்டும் இதே ரீதியான மருத்துவம் தொடரும்.

முதுகு வலி பொதுவான ஒரு பிரச்சனையாகும். நாம் எல்லோருமே ஒரு முறையாவது முதுகு வலியால் அவதிப்பட்டிருப்போம். உலகளவில் உடல் வலிகளுக்காக மருத்துவம் பார்ப்போர் எண்ணிக்கையே மிக அதிகம் என்று சமீபத்திய ஆய்வுகள் சொல்லுகின்றன. இந்தியாவில் 40 வயதுக்கு மேற்பட்டோர் சுமார் 18.6% மூட்டு வலியாலும், 8.9% முதுகு வலியாலும், 7% பேர் பொதுவான உடல் வலியாலும், 4% பேர் பல மூட்டுகளில் ஏற்படும் (mutliple joint pain) பாதிக்க படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இதன் விளைவு சிறு வலிக்கு மருத்துவம் பார்க்கப் போன நமக்கு இலவசமாக இன்னொரு நோய் வந்து சேருகிறது. இதற்கு என்ன தீர்வு? எப்படி இது போன்ற சிறு சிறு வலிகளை அணுகுவது? ஏன் இந்த வலிகள்? வலிகள் நமக்கு சொல்கின்றன? என இது போன்ற பல முக்கியமான கேள்விகளுக்கு தொடர் விளக்கங்களை அளிப்பதே இத்தொடரின் நோக்கம்.

தொடரும்...

T. செந்தில்குமார்,

கல்லூரி விரிவுரையாளர்,

ஆக்ஸ்போர்டு பிசியோதெரபி மருத்துவ கல்லூரி,

சாய் பிசியோ கேர் & க்யூர், பெங்களூர்.

செல்போன் - 8147349181

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com