2. வலி நிவாரணிகள் வேண்டாமே

அதிகப்படியான வேலை பளு, அலுவலக பயணம் அலைச்சல் போன்ற பல்வேறு காரணங்களால்
2. வலி நிவாரணிகள் வேண்டாமே

அதிகப்படியான வேலை பளு, அலுவலக பயணம் அலைச்சல் போன்ற பல்வேறு காரணங்களால் வரும் உடம்பு வலியை பற்றிய ஒரு அறிதலும் எச்சரிக்கை பதிவுமே இந்தக் கட்டுரை.

தொடர் வேலைப்பளு நிறைந்த வாழ்க்கை முறையில் எல்லோரும் கடந்து வந்திருக்க நேரிடும் ஓர் பொதுவான வார்த்தை வலி. எங்கேனும் உடலில் வலியில்லாமல் இருப்பவர்களை காண்பது மிக அரிதாகிவிட்ட நம் நவீன சமூகத் தலைமுறையில், கடைத்தெருவில் உள்ள மருந்து கடையில் எல்லோருமே வாடிக்கையாளர்கள் மாறிப் போய்விட்டோம். நம்மில் பலரும், உடம்பில் சிறிது வலியிருந்தாலும் நாளை நிறைய வேலையிருக்கே அலுவலகத்தில் இந்த வலியால் அந்த வேலைகள் தடைபட்டு விடக் கூடாது என்ற எண்ணத்தில் வலி நிவாரண மாத்திரைகளில் ஒன்றை விழுங்கி விட்டு  தூங்க செல்லும் பலருக்கும் ஓர் அன்பு வேண்டுகோள். நம் உடல் கட்டமைப்பில் வியக்கும் வண்ணம் அமைந்த பகுதி மூளையாகும். நாம் மூளையில் உள்ள லிம்பிக் சிஸ்டம் என்ற பகுதியும் இன்னும் சில பகுதிகளும் நம் உடம்பில் வலிகள் ஏற்படும் பொழுது வலியை குணப்படுத்த சில வலி நிவாரண வேதியல் காரணிகளை(அதாவது ஹோர்மோன்) சுரக்கிறது. இதனை ஓபியாட்ஸ் (opiods) என்று மருத்துவ உலகம் கூறும். இது சுரந்து வலியுள்ள பகுதியை கண்டறிந்து குணப்படுத்த நமக்கு தேவை பொறுமை. சுரந்த வலி நிவாரணம் வலி இருக்கும் இடத்தை வந்து சேர எடுக்கும் கால அளவு வரை யாருக்குமே பொறுமை இருப்பதில்லை.  

எதற்கெடுத்தாலும் வலி நிவாரண மாத்திரைகள் சாப்பிடுவதால் உடல் உறுப்புகளில் பல்வேறு பாதிப்புகளுக்கு உட்படுவதை யாருமே பொருட்படுத்துவதாகயில்லை. இதன் விளைவு சிறிய வயதிலேயே சிறுநீரக செயலிழப்பு போன்ற கொடிய வியாதிகளில் மாட்டிக்கொண்டு உயிரை தொலைக்கும் அபாயம் நேர்கிறது. பெரும்பாலான வலி நிவாரண மாத்திரைகள் உங்கள் வயிற்று பகுதியின் உள்ளே உள்ள மெல்லிய சவ்வு போன்ற பகுதிகளில் ரணத்தை உண்டாக்கி வயிற்று புண்களை ஏற்படுத்திவிடுகிறது.  இதற்கும் நம்மவர்கள் கூடவே gelusil ஆரஞ்சு/பிங்க் மருத்துகளை ஒரு மூடியை குடித்துவிட்டு தூங்கச்செல்லுவதை வாடிக்கையாக்கிக் வைத்து இருப்பார்கள்.  

உடம்பில் ஏற்படும் அனைத்து வலிகளை குறைக்க முடியவில்லை என்றாலும், பிசியோதெரபி என்ற மருத்துவம் உங்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பதில் 100 சதவிகிதம் உண்மை இருக்கிறது. பல்வேறு மாற்றங்கள் நம்மை சுற்றி சுழண்டு கொண்டிருக்கும் கணிப்பொறி உலகத்தில், நம் அருகிலிருந்தும் கண்டு கொள்ளப்படாமல் இருக்கும் ஒரு சிறப்பு மருத்துவ  முறை பிசியோதெரபி மருத்துவமாகும்.

பிசியோதெரபி மருத்துவத்தில் எந்த பக்கவிளைவுகள் இல்லாமலும் பெரும்பாலும் தொட்டு உணர்ந்து வலியின் காரணங்களை கண்டறிந்து காரணங்களை சரி செய்து அதற்கான தீர்வுகள் மீண்டும் வாராமல் எப்படி பாதுகாத்துக்கொள்வது(prevention) போன்ற முறையான சிகிச்சை தரும் ஓர் சிறப்பு சிகிச்சை முறை. நவீன மருத்துவத்தின் ஒரு சிறப்புப் பிரிவே என்றாலும் பிசியோதெரபி மருத்துவத்தில் ஏற்பட்ட தொடர் ஆய்வு முன்னேற்றங்களால் கைகளை மட்டும் கொண்டே தரும் சிறப்பு சிகிச்சை முறைகள் உள்ளன. பொதுவாக உங்கள் வலிகளை முக்கியமாக தசை, மூட்டு, ஜவ்வு, நரம்பு சார்ந்த வலிகளை பக்கவிளைவுகள் சிறிதும் இல்லாமல் சரி செய்ய முடியும்.

சிறிது நாட்களுக்கு முன் ஒரு மருத்துவர் கழுத்து வலியுடன் என்னிடம் சிகிச்சை பெற வந்தார், வந்தவரிடம் உங்கள் வலிக்கு வலி நிவாரண மாத்திரைகள் ஏன் எடுத்துக்கொள்ளவில்லை என்று கேட்ட போது, அவரே ஒப்புக்கொண்டு பாரசிட்டமால் எனப்படும் எளிய மாத்திரைகள் கூட நான் நம்புவதில்லை அதிலும் பக்கவிளைவுகள் இருப்பது சமீபத்திய ஆய்வின் மூலம் கண்டறிந்து உள்ளதால் வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக் கொள்வதில்லை.

மக்களே நமக்கு மட்டும் வலி மாத்திரைகள் சரியா என முதலில் அவரிடம் கேட்க வேண்டும் என்று இருந்தாலும், என் மருத்துவ துறை சார்ந்தவர் என்பதால் அதை விடுத்து, தொடர் பிசியோதெரபி மூன்று நாட்கள் கொடுத்து, கழுத்து தசைகளை வலுவாக்கும் உடற்பயிற்சிகளையும் தந்தவுடன் அவர் இன்று வலி நிவாரணம் பெற்று நலமாக இருக்கிறார். சிறப்பு சிகிச்சை முறை என்றதும் நண்பர்களே யோசிக்க வேண்டாம், உங்கள் அருகில் உள்ள பிசியோதெரபி மருத்துவரை நாடுங்கள். உங்கள் சிறு வலிகளுக்கு கூட மிகச் சிறப்பான மருத்துவம் கிடைக்கும். மிக முக்கியமாக பக்கவிளைவுகள் ஏதுமற்ற சிறப்பாக சிகிச்சையை அளிக்க உங்களுக்கு அவர் காத்துக் கொண்டிருக்கிறார்.

தொடரும்...

T. செந்தில்குமார்

கல்லூரி விரிவுரையாளர்,

ஆக்ஸ்போர்டு பிசியோதெரபி மருத்துவ கல்லூரி,

சாய் பிசியோ கேர் & க்யூர், பெங்களூர்.

செல்போன் - 8147349181

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com