தில்லியில் சங்கமித்த புகைப்படக் கலைகள்

உலகளாவிய புகைப்படக் கலைஞர்களின் பன்முகத் திறன்களை பறைசாற்றும் வகையில், தில்லியில் வியாழக்கிழமை தொடங்கிய புகைப்படக் கண்காட்சி, அத்துறை சார்ந்த கலைஞர்களையும், ஆர்வலர்களையும் சங்கமிக்கும் முகமைபோல அமைந்தது.

உலகளாவிய புகைப்படக் கலைஞர்களின் பன்முகத் திறன்களை பறைசாற்றும் வகையில், தில்லியில் வியாழக்கிழமை தொடங்கிய புகைப்படக் கண்காட்சி, அத்துறை சார்ந்த கலைஞர்களையும், ஆர்வலர்களையும் சங்கமிக்கும் முகமைபோல அமைந்தது.

அகில இந்திய புகைப்பட வர்த்தகம் மற்றும் தொழில்துறை சங்கம் நடத்தும் இக்கண்காட்சியை தில்லி பிரகதி மைதானத்தில், புகழ்பெற்ற சர்வதேச புகைப்பட சுருள் நிறுவனமான "ஃபுயூஜிபிலிம்' மேலாண் இயக்குநர் யசுநோபு நிஷியாமா உள்ளிட்டோர் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனர்.

200 அரங்குகள்: வரும் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் கேமரா தொழில்நுட்பத்தை விளக்கும் வகையில் மொத்தம் 210 அரங்குகள் உள்ளன.

புகைப்படக் கருவிகள், அவை தொடர்புடைய தொழில்நுட்பக் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்கள், திரைப்படத் துறைக்குத் தேவைப்படும் கருவிகள், கிரேன்கள், டிஜிட்டல் புகைப்படக் கருவிகள், புகைப்பட வடிவமைப்பு தயாரிப்புகள், பன்னாட்டு நிறுவனங்களின் புகைப்பட மென்பொருள்கள், ஐடி கார்டுகள் தயாரிக்கும் நிறுவனங்கள், பாலிவுட் திரையுலகத்துக்குத் தேவைப்படும் கருவிகள் போன்றவை அமைந்துள்ளன. 8-ஆவது வளாகத்தில் பழங்கால கேமராக்கள் அடங்கிய மூன்று அரங்குகள் இடம் பெற்றுள்ளன.

முதல் நாள் கண்காட்சியை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழில்முறை சார்ந்த புகைப்படக் கலைஞர்கள், புகைப்பட ஆர்வலர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட சுமார் ஒரு லட்சம் பேர் பார்வையிட்டனர்.

800 வகை கேமராக்கள்: இதன்படி, வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை (ஜனவரி 11) "மியூசியோ கேமரா' அரங்கில் உலகம் முழுவதும் முந்தைய காலங்களில் பயன்படுத்தப்பட்ட சுமார் 800 வகையான கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.

அனுமதி இலவசம்: மேற்கண்ட நான்கு நாள் நிகழ்வுகளுக்கும் முன்பதிவு செயதல் அவசியம் என்ற போதும், கண்காட்சியைப் பார்வையிட கட்டணம் ஏதும் கிடையாது.

பார்வையாளர்களை கவர்ந்த கேமராக்கள்: இக்கண்காட்சியில் அடுத்த தலைமுறையினருக்கான தொழில்நுட்பங்கள், வைஃபை தொழில்நுட்பம் மூலமும், ப்ளூடூத் மூலமும் புகைப்படங்களை எடுக்கும் கேமராக்கள், உடனுக்குடன் புகைப்படத்தை எடுத்து மின்னஞ்சல் செய்யும் வசதி கொண்ட கேமரா கருவிகள் உள்ளிட்டவை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

பார்வைக்கு வைக்கப்பட்ட பழைய மாடல் கேமராக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com