
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் கொட்டித் தீர்த்த கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளச் சேதங்களுக்கு நிவாரண நிதியான தனது முதல் மாதச் சம்பளத்தை அளிப்பதாக பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி அறிவித்துள்ளார்.
பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று நிதிஷ்குமார் முதல்வரானார், அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி துணை முதல்வராக பதவியேற்றுள்ளார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி, சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண நிதிக்காக தனது முதல் மாதச் சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்குவதாக அறிவித்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் இந்த நிதியுதவியை செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.