உ.பி. பாஜக தொண்டர் பலி: மாவட்ட ஆட்சியர், காவல் துறை உயரதிகாரி பணியிடை நீக்கம்

உத்தரப் பிரதேச மாநிலம், பலியா மாவட்டத்தில் பாஜகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது,

லக்னௌ: உத்தரப் பிரதேச மாநிலம், பலியா மாவட்டத்தில் பாஜகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அக்கட்சித் தொண்டர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அந்த மாவட்ட ஆட்சியர், காவல் துறைக் கண்காணிப்பாளர் ஆகியோரை அந்த மாநில அரசு பணியிடை நீக்கம் செய்தது.
இதுகுறித்து அந்த மாநில அரசின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "பலியா மாவட்ட ஆட்சியர் ராகேஷ் குமார், மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் எம்.கே.ஜா ஆகியோர் சனிக்கிழமை இரவு பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்' என்றார்.
பாஜக தொண்டர் ஒருவர் பசுக் கடத்தலில் ஈடுபட்டதாக முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டதை அடுத்து, பாஜகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அக்கட்சித் தொண்டர் வினோத் ராய் (31) உயிரிழந்தார். மேலும் 50 பேர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக உயிரிழந்தவரின் உறவினர் அளித்த புகாரின்பேரில், நார்ஹி காவல் நிலைய துணை ஆய்வாளர், பலியா மாவட்ட துணை ஆட்சியர் பச்சே லால் மௌரியா, 11 காவலர்கள் ஆகியோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com