கலிகோ புல் மரணம் குறித்து மூத்த காவல்துறை அதிகாரி விசாரணை: முதல்வர் பெமா காண்டு

அருணாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் கலிகோ புல் (படம்) மரணம் குறித்து மூத்த
கலிகோ புல் மரணம் குறித்து மூத்த காவல்துறை அதிகாரி விசாரணை: முதல்வர் பெமா காண்டு

இடாநகர்: அருணாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் கலிகோ புல் (படம்) மரணம் குறித்து மூத்த காவல்துறை அதிகாரி விசாரணை நடத்துவார் என்று அந்த மாநில முதல்வர் பெமா காண்டு அறிவித்துள்ளார்.
அருணாசலப் பிரதேச மாநில சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து இடாநகரில் முதல்வர் பெமா காண்டு உயரதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், கலிகோ புல் மரணம் குறித்த விசாரணையை விரைந்து நடத்தி முடிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
கலிகோ புல் மரணம் தொடர்பாக ஐ.ஜி.பி. பதவிக்கு இணையான காவல்துறை அதிகாரி விசாரணை நடத்துவார் எனவும்
பெமா காண்டு அறிவித்தார்.
முன்னதாக, அருணாசலப் பிரதேச முதல்வராக இருந்த நபம் துகிக்கு எதிராக கலிகோ புல் தலைமையிலான காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போர்க்கொடி உயர்த்தினர். அவர்களுக்கு பாஜகவும் ஆதரவளித்தது. இதையடுத்து, பாஜக ஆதரவுடன் கலிகோ புல் கடந்த பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி அரசமைத்தார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 13-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், கலிகோ புல் தலைமையிலான அரசு செல்லாது என அறிவித்தது. இதையடுத்து, மறைந்த முதல்வர் டோர்ஜி காண்டுவின் மகன் பெமா காண்டு புதிய முதல்வராக பதவியேற்றார். அவருக்கு கலிகோ புல் உள்ளிட்ட அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் ஆதரவளித்தனர்.
இதனிடையே, இடாநகரில் உள்ள முதல்வர் இல்லத்தில் கலிகோ புல் கடந்த 9-ஆம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதையடுத்து, கலிகோ புல் மரணம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும், பாஜகவும் வலியுறுத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com