வேண்டுமென்றே வரி ஏய்ப்பு செய்தோர் மீது மட்டுமே சட்ட நடவடிக்கை: அருண் ஜேட்லி

வேண்டுமென்றே வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித் துறையால் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டவர்கள் மீது மட்டுமே சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கமளித்துள்ளார்.

வேண்டுமென்றே வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித் துறையால் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டவர்கள் மீது மட்டுமே சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கமளித்துள்ளார்.

வருமான வரிக் கணக்குகளை முறையாகத் தாக்கல் செய்யாதவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், சிறைத் தண்டனை பெற வகை செய்யும் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வருமான வரித் துறை முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. மேலும், வேண்டுமென்றே வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோரின் சமையல் எரிவாயு இணைப்பு துண்டிக்கப்படும், பான் அட்டை முடக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின. வரி ஏய்ப்பு செய்வோரின் பெயர்கள் மற்றும் சுய விவரங்களை வருமான வரித் துறை இணையதளப் பக்கத்தில் பொதுமக்கள் பார்வைக்கு பதிவேற்றம் செய்யப்படும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது. இதன் பிறகும் பலர் வேண்டுமென்ற வரி செலுத்தாமல் அரசை ஏமாற்றி வருவதால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு அதுதொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து தில்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் புதன்கிழமை விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது: வேண்டுமென்றே வரி செலுத்தாத 63 நபர்களின் பெயர்கள் வருமான வரித் துறை மூலம் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. அதில் தேடப்பட்டு வரும் நபர்களும் அடங்குவர். அந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வேறு சில பிரச்னைகளால் வரி நிலுவை வைத்துள்ளவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. அதேபோல் வரி செலுத்தாத அனைவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் சொத்துக்கள் முடக்கப்படும் என்றும் வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றார் அருண் ஜேட்லி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com