உத்தரகண்ட் முதல்வருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்: காங்கிரஸ்

உத்தரகண்டில் தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டதில் ரூ.250 கோடிக்கு ஊழல் நடைபெற்றதாகக் கூறப்படும்

உத்தரகண்டில் தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டதில் ரூ.250 கோடிக்கு ஊழல் நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில், அந்த மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்துக்கு எதிராக சட்டப் பேரவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவருவோம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலம், உதான் சிங் நகர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு (என்ஹெச் 74) நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதில் ஊழல் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக, மாநில அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு மேற்கொண்ட விசாரணையில் ரூ.250 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கடந்த ஜூன் மாதம் சட்டப் பேரவையில் அறிவித்தார்.
ஆனால், பேரவையில் அளித்த வாக்குறுதியில் இருந்து பின்வாங்குவதாக அவர் மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக, பேரவை எதிர்க்கட்சித் தலைவர் இந்திரா ஹிருதயேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
என்ஹெச் 74 ஊழல் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் திரிவேந்திர சிங் அறிவித்து 3 மாதங்கள் ஆகிவிட்டன. இந்த ஊழலில் முக்கியப் புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதால், மத்திய அரசு எந்த முடிவும் எடுக்காமல் தொடர்ந்து தயக்கம் காட்டுகிறது. இதன் காரணமாக, மாநில அரசும் தனது வாக்குறுதியில் இருந்து பின்வாங்கி வருகிறது.
இந்த விவகாரத்தில், மாநில மக்களைத் தவறாக வழிநடத்தி வரும் முதல்வர் திரிவேந்திர சிங்குக்கு எதிராக அடுத்து நடைபெறும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவருவோம்.
அத்துடன், என்ஹெச் 74 ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், காங்கிரஸ் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.
உத்தரகண்டில் குடியிருப்பு பகுதிகளில் மதுக் கடை திறப்பதற்கு, மாநில பாஜக அரசு அனுமதி வழங்கியுள்ளது கண்டனத்துக்குரியது. இப்பிரச்னையில் பெண்களைத் திரட்டி பெரும் போராட்டம் நடத்துவோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com