காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை: தமிழக வீரர் பலி

ஜம்மூ-காஷ்மீர் மாநிலம் ஷோபியானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் உள்பட 2 ராணுவ வீரர்கள்
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை: தமிழக வீரர் பலி

ஸ்ரீநகர்: ஜம்மூ-காஷ்மீர் மாநிலம் ஷோபியானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் உள்பட 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவலில் ஈடுபட்டு ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சுதந்திரதின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் ஷோபியான் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து, நேற்று பாதுகாப்பு படையினர் ஷோபியான் மாவட்டத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, கைனாபோரா பகுதியில் அவ்னிரா என்ற இடத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சூடு நடத்தினார்கள். அதற்கு பாதுகாப்படையினரும் பதிலடி கொடுத்தனர். இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். தீவிரவாதிகள் சுட்டத்தில் ராணுவ தரப்பில் 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து அந்தப் பகுதியில் கூடுதலாக பாதுகாப்பு படையினர் அனுப்பப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தீவிர சீகிச்சை பெற்று வந்த ராணுவ வீரர்கள் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்த வீரரில்  ஒருவர் தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் சேர்ந்த கண்டாணி கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா என்று ராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் 2012 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தவர். அவருக்கு பெற்றோர்கள், மனைவி மற்றும் சகோதரி உள்ளனர்.

மற்றொரு ராணுவர் வீர்ர மகாராஷ்டிராவில் உள்ள அகோலாவில் உள்ள லோனாக்ரா கிராமத்தைச் சேர்ந்த சுமேத் வம்மன். இவர் 2011 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். அவருக்கு பெற்றோரும், சகோதரரும் மற்றும் சகோதரியும் உள்ளனர்.

காஷ்மீரில் நேற்றிரவு ஷோபியான் மாவட்டத்தில் வீரமரணம் அடைந்த இரு ராணுவவீரர்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை இந்திய ராணுவம் மரியாதை செலுத்தப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com