அமித் ஷாவின் தமிழக வருகை திடீரென ஒத்திவைப்பு

அமித் ஷாவின் தமிழக வருகை திடீரென ஒத்திவைப்பு

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் தமிழக வருகை திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவரது தமிழக வருகை குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


புது தில்லி: பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் தமிழக வருகை திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவரது தமிழக வருகை குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகஸ்ட் 22ம் தேதி தமிழகம் வர இருந்தார். தமிழகத்தில் 3 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், திடீரென இன்று அமித் ஷாவின் தமிழக வருகை ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பாஜக ஆளும் மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் நரேந்திர மோடியும், அமித் ஷாவும் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த நிலையில் அமித் ஷாவின் தமிழகப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com