மண்டை ஓடு இல்லாத 24 வார கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

புணேவைச் சேர்ந்த கர்ப்பிணி வயிற்றில் வளர்ந்து வரும் மண்டை ஓடு இல்லாத 24 வாரக் கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மண்டை ஓடு இல்லாத 24 வார கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

புது தில்லி: புணேவைச் சேர்ந்த கர்ப்பிணி வயிற்றில் வளர்ந்து வரும் மண்டை ஓடு இல்லாத 24 வாரக் கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கருவை பரிசோதித்த மருத்துவர்கள், 24 வாரக் கருவுக்கு மண்டை ஓடு இல்லை என்றும், அதற்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று அறிக்கை அளித்ததை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், கருவைக் கலைக்க அனுமதி வழங்கியுள்ளது.

20 வயதான பெண், தனது வயிற்றில் வளரும் கருவுக்கு மண்டை ஓடு வளர வில்லை என்பதால், அது பிறந்தாலும், உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்பதால், கருவைக் கலைக்க அனுமதிக்குமாறு கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மருத்துவ அறிக்கையை ஏற்றுக் கொண்டு கருவைக் கலைக்க அனுமதி அளித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com