ஹிந்தி இல்லாமல் நாட்டின் வளர்ச்சி இல்லை: வெங்கய்ய நாயுடு

""ஹிந்தி இல்லாமல் நாட்டின் வளர்ச்சி சாத்தியமாகாது'' என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
ஹிந்தி இல்லாமல் நாட்டின் வளர்ச்சி இல்லை: வெங்கய்ய நாயுடு

""ஹிந்தி இல்லாமல் நாட்டின் வளர்ச்சி சாத்தியமாகாது'' என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் மகாத்மா காந்தியின் உரை மற்றும் படைப்புகள் ஆங்கிலத்தில் 100 தொகுதிகளாக தயாரிக்கப்பட்டன.
இவற்றை குஜராத் மாநிலத்திலுள்ள சபர்மதி ஆசிரமத்தில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வெங்கய்ய நாயுடு தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
காந்தியின் போதனைகளும், உபதேசங்களும் காலத்தால் அழியாதவை. இந்தியா மட்டுமல்லாது ஒட்டுமொத்த மனிதகுலமும் சந்திக்கும் பிரச்னைகள், மோதல்கள், சவால்களுக்கு உரிய தீர்வுகளை காந்தியின் போதனைகள் வழங்கும். அவை எக்காலத்துக்கும் பொருந்தும்.
நாட்டில் தற்போது மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும், பொதுவாழ்வில் மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தச் சூழலில், காந்தியின் போதனைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
தற்போது, ஆங்கிலத்தில் தயாராகியுள்ள காந்தியின் படைப்புகளை விரைவில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும். இதன்மூலம், அதிக மக்கள் பயனடைவார்கள்.
ஹிந்தியின் அவசியம்: நாட்டில் பெரும்பாலான மக்கள் ஹிந்தி மொழியில் பேசுபவர்களாக உள்ளனர். ஹிந்தி இல்லாமல் நாட்டின் வளர்ச்சி சாத்தியமாகாது. எனவே, அனைவரும் ஹிந்தியை கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். அதேசமயம், பொதுமக்கள் தத்தமது தாய்மொழியை புறக்கணித்துவிடக் கூடாது என்றார் வெங்கய்ய நாயுடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com