காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி காலமானார்: 9 ஆண்டுகள் கோமாவில் இருந்தவர்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 72.
காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி காலமானார்: 9 ஆண்டுகள் கோமாவில் இருந்தவர்

புது தில்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 72.

உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாஸ்முன்ஷி, கடந்த 2008ம் ஆண்டு முதல் கோமாவில் இருந்தார். இந்த நிலையில், பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி இன்று நண்பகல் 12 மணியளவில் காலமானதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. சிகிச்சை பலனின்றி இன்று நண்பகல் 12.10 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

2008ம் ஆண்டு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரயரஞ்சன் தாஸ்முன்ஷி, கோமா நிலைக்குச் சென்றார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மதியம் அவரது உயிர் பிரிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com