விவேக் தேவ்ராய் தலைமையில் பொருளாதார ஆலோசனைக் குழு

நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆய்வு நடத்த 5 நபர் அடங்கிய குழுவை பிரதமர் நரேந்திர மோடி அமைத்துள்ளார்.
விவேக் தேவ்ராய் தலைமையில் பொருளாதார ஆலோசனைக் குழு

நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆய்வு நடத்த 5 நபர் அடங்கிய குழுவை பிரதமர் நரேந்திர மோடி அமைத்துள்ளார்.
நீதி ஆயோக் உறுப்பினர் விவேக் தேவ்ராய் தலைமையிலான இந்தக் குழுவில் நீதி ஆயோக் தலைமை ஆலோசகர் ரத்தன் வாட்டாள், பொருளாதார வல்லுநர்கள் சுர்ஜித் பல்லா, ரத்தின் ராய், ஆஷிமா கோயல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பிரதமர் மோடியின் உத்தரவின்பேரில் இந்த பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து இக்குழு ஆய்வு செய்து ஆலோசனை அளிக்கும். நாட்டின் பொருளாதாரப் பிரச்னைகள் குறித்து தன்னிச்சையாக ஆய்வு செய்து ஆலோசனை வழங்கவும், பிரதமர் கேட்டுக் கொண்டதின் பேரில் பொருளாதார விவகாரங்களில் ஆலோசனை கூறவும் இந்தக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5.7 சதவீதமாகக் குறைந்துவிட்டது. இதனையடுத்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வந்தன. முக்கியமாக மத்திய அரசு மேற்கொண்ட ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை, சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) அவசரகதியில் அமல்படுத்தியது ஆகியவைதான் பொருளாதார வளர்ச்சியை பாதித்துவிட்டன என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
இது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்ட அறிக்கையில், 'இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துவிட்டது உண்மைதான். கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்தே இந்தியப் பொருளாதாரத்தில் சுணக்கம் நிலவி வருகிறது. அதுதான் இந்த நிதியாண்டில் முதல் காலாண்டிலும் எதிரொலித்தது' என்று கூறியிருந்தது.
இந்தச் சூழ்நிலையில் பொருளாதார ஆலோசனைக் குழுவை மோடி அமைத்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com