சுடச்சுட

  

  கட்சி நிதிக்காக கூலி வேலை செய்யும் தெலங்கானா முதல்வர்

  By DIN  |   Published on : 13th April 2017 03:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  chandrasekar_rao


  டிஆர்எஸ் கட்சி உதயமான தினத்தைக் கொண்டாடுவதற்குத் தேவையான நிதியைத் திரட்ட கூலி வேலை செய்யவும் தயார் என்று தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார்.

  தெலங்கானா ராஷ்ட்டிர சமிதி கட்சியின் உதயமான நாள் நிகழ்ச்சி இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை நடத்தத் தேவையான பணத்துக்காக், நான் இரண்டு நாட்கள் கூலி வேலை செய்து பணம் திரட்ட உள்ளேன் என்று சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.

  அதோடு, டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியின் மூத்தத் தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் கூலி வேலை செய்து, பணம் திரட்டி கட்சி நிதிக்காக வழங்க உள்ளனர்.

  ஏப்ரல் 14 முதல் 20ம் தேதி வரை 'குலாபி (பிங்க்) கூலி தினங்கள்' என்று அறிவித்துள்ள சந்திரசேகர ராவ், கட்சியின் அனைத்துத் தொண்டர்களும் இந்த நாளில் கூலி வேலை செய்து கட்சிக்காக நிதி திரட்டுமாறு வலியுறுத்தியுள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai