கேரளாவில் சம்பவம்: சிறையில் இருந்து தப்பிய கைதி 3வது நாளில் திரும்பி வந்த விசித்திரம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நெட்டுக்கல்தேரி என்ற இடத்தில் உள்ள திறந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிய கைதி ரசாக், 3வது நாளே சிறைக்குத் திரும்பி வந்த விசித்திரம் நடந்தேறியுள்ளது.
கேரளாவில் சம்பவம்: சிறையில் இருந்து தப்பிய கைதி 3வது நாளில் திரும்பி வந்த விசித்திரம்

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நெட்டுக்கல்தேரி என்ற இடத்தில் உள்ள திறந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிய கைதி ரசாக், 3வது நாளே சிறைக்குத் திரும்பி வந்த விசித்திரம் நடந்தேறியுள்ளது.

சிறையில் இருந்து தப்பிச் சென்று 3 நாட்கள் அங்கும் இங்கும் அலைந்த அப்துல் ரசாக், உணவு கிடைக்காமல் பட்டினியோடு போராடி இறுதியாக சிறைக்கே திரும்பி வந்துள்ளார்.

சிறைக்கு திரும்பி வந்த அப்துல் ரசாக் மிகவும் களைப்பாக இருந்தான். வந்ததும் முதலில் உணவு தருமாறு கேட்டான். சிறை வளாகத்துக்கு அருகே இருந்த குழிகளில் தான் பதுங்கியிருந்ததாகவும், எங்கு அலைந்தும் உணவு கிடைக்கவில்லை. கொடுமையான பசியால் சிறைக்கே மீண்டும் திரும்பி வந்ததாக சிறை அதிகாரியிடம் அவன் கூறியுள்ளான்.

ஏப்ரல் 8ம் தேதி சனிக்கிழமை சிறைச்சாலையில் இருந்து தப்பிய 36 வயது கைதி அப்துல் ரசாக் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர். தப்பிச் சென்ற அன்று, அவனிடம் இருந்து காவல்துறையினர் செல்போனை பறிமுதல் செய்தனர். அதனால், தன்னை மத்திய சிறைக்கு அனுப்பி விடுவார்களோ என்ற பயத்தில் சிறையில் இருந்து தப்பியுள்ளான். அவனை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

திருட்டு வழக்கில் கைதான ரசாக், மிகவும் நல்ல கைதி. சொல்வதைக் கேட்பான். பயத்தில்தான் அவன் சிறையில் இருந்து தப்பினான். திரும்பி வருவான் என்று எதிர்பார்த்தோம். ஆனாலும் அவன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறை நிர்வாகம் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com