அத்து மீறும் பயணிகள்: மூக்கணாங்கயிறு போடத் தயாராகும் ஏர் இந்தியா!

இனி விமான பயணத்தின் பொழுது அத்துமீறும் பயணிகள் மீது அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்க புதிய விதிமுறைகளை ஏர் இந்தியா நிறுவனம் வகுத்துள்ளது. 
அத்து மீறும் பயணிகள்: மூக்கணாங்கயிறு போடத் தயாராகும் ஏர் இந்தியா!

புதுதில்லி: இனி விமான பயணத்தின் பொழுது அத்துமீறும் பயணிகள் மீது அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்க புதிய விதிமுறைகளை ஏர் இந்தியா நிறுவனம் வகுத்துள்ளது. 

இனி ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்வோர், பயணத்தின் பொழுது மற்றவர்களுக்கு சிரமம் அளிக்கும் வகையில் அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால்,  அவர்கள் மீது அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்க புதிய விதிமுறைகளை ஏர் இந்தியா நிறுவனம் வகுத்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இனி ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்வோரது நடத்தையின் காரணமாக விமான புறப்பாடு ஒரு மணி நேரம் தாமதாமானால் அவர்களுக்கு ரூ.ஐந்துலட்சம் அபராதமாக விதிக்கப்படும். அதே போல் சக பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் மோதலில் ஒரு பயணி  ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தில்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா நிறுவன மேலாளர் ஒருவரை சிவசேனா எம்.பி ஒருவர் காலணியால் தாக்கிய சம்பவம் மற்றும் கொல்கத்தாவில் திரிணாமுல் கட்சி பெண் எம்பி ஒருவரின் செய்கையால் விமானம் ஒரு மணி நேரம் தாமதமாகியது ஆகிய சம்பவங்கள் இந்த முடிவுக்கு காரணமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com