சுடச்சுட

  

  காஷ்மீர் முன்னாள் முதல்வரின் தலைக்கு ரூ.ஒரு லட்சம் விலை வைத்த பஜ்ரங் தள் தலைவர் !

  By DIN  |   Published on : 17th April 2017 07:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  farook_abdhulla

   

  லக்னோ: காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ. ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என்று பஜ்ரங் தள் அமைப்பின் தலைவர் ஒருவர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

  ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா. இவர் தற்போது ஸ்ரீநகர் தொகுதி எம்.பி.யாகி உள்ளார். காஷ்மீரில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பாக இவர் அவ்வப்பொழுது சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வருகிறார்.

  ஆக்ரா மாவட்ட பஜ்ரங் தள் அமைப்பின் தலைவராக உள்ளவர் கோவிந்த் பராஸ்கர். இவர் கூட்டம் ஒன்றில் பேசும் பொழுது காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் பாதுகாப்பு பணியில் உள்ள இந்திய பாதுகாப்புப் படையினர் உள்ளூர் மக்களால் தாக்கப்பட்டிருப்பது ராணுவ வீரர்களை அவமதிக்கின்ற செயலாகும். இதற்கு பஜ்ரங் தள் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.

  இந்த விஷயத்தில் ராணுவ வீரர்கள் மீது கற்கள் வீசிய நபர்களுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துலா பாதுகாப்பு வழங்கிறார். இது தேச விரோத செயலாகும், இதை பொறுத்துக் கொள்ள முடியாது என்றவர், பரூக் அப்துல்லாவின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ. ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும்என கூறி உள்ளார்.

  அவரது இந்த பேச்சு அதிர்ச்சி அலைகளை கிளப்பியுள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai