சுடச்சுட

  

  சட்டப்பேரவை கட்டடம், தலைமைச் செயலகத்தை தாக்க சதித்திட்டம்: 2 பயங்கவாதிகள் கைது

  By DIN  |   Published on : 24th April 2017 02:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  up-assembly

  லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை கட்டடம் மற்றும் தலைமைச் செயலகத்தை தாக்க சதித்திட்டம் தீட்டியிருந்த 2 பயங்கரவாதிகளை, அம்மாநில போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

  உளவுத்துறை விடுத்த பயங்கரவாத எச்சரிக்கையை அடுத்து, உத்தரப்பிரதேச போலீஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

  அவர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், தலைநகர் லக்னோவில் உள்ள பழங்கால கட்டடங்கள், சட்டப்பேரவை மற்றும் தலைமைச்செயலகம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியிருந்தது தெரியவந்துள்ளது.

  மேலும், முக்கிய கட்டடங்கள் குறித்து அவர்களிடமிருந்த வீடியோக்களும், வெடி பொருட்கள் உள்ளிட்டவைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

  உத்தரப்பிரதேச போலீஸாரின் அதிரடி நடவடிக்கையால், அம்மாநிலத்தில் நடைபெறவிருந்த மிகப்பெரிய தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் முழுவதும் பயங்கரவாதிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai