சுடச்சுட

  

  நக்ஸல் தாக்குதலில் பலியான சிஆர்பிஎப் வீரர்கள் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றார் கம்பீர்!

  By எழில்  |   Published on : 28th April 2017 11:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  gambhir45

   

  சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தின் பஸ்தர் பகுதியில் நக்ஸல் தீவிரவாதிகள் அண்மையில் தாக்குதல் நடத்தினார்கள். கடந்த திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 25 பேர் வீரமரணம் அடைந்தனர். சுக்மா மாவட்டத்தில் கடந்த மாதம் 11-ஆம் தேதி நக்ஸல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். 

  இந்நிலையில் சமீபத்திய தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் 25 பேரின் குடும்பத்துக்கு உதவி செய்ய கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் முன்வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற பிறகு அதுகுறித்த தன் கருத்துகளைத் தொடர்ந்து ட்விட்டரில் தெரிவித்துவந்தார். இந்நிலையில் 25 சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் தான் ஏற்றுக்கொள்வதாக கம்பீர் அறிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai