சுடச்சுட

  

  'முத்தலாக்' முறையை அரசியலாக்க வேண்டாம்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

  By ENS  |   Published on : 29th April 2017 02:48 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  NarendraModi-EPS

  புது தில்லி: 'முத்தலாக்' முறை அரசியலாக்கப்படாது என்று முஸ்லிம் மக்களுக்கு உறுதி அளித்துள்ள பிரதமர் மோடி, இந்த சமுதாயத்தைச் சேர்ந்த மக்களே முன்வந்து இந்த பிரச்னைக்குத் தீர்வு காண்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

  கன்னட கவிஞர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி பசவேஸ்வர் பிறந்தநாள் விழாவில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்கள் முற்போக்கு சிந்தனைகளை மாற்றி, புதிய நாகரீக பாதையில் பயணிப்பார்கள் என்று நம்புவதாகக் கூறினார்.

  மேலும், முத்தலாக் குறித்து இந்தியாவில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. இந்தியாவின் மிகவும் பெருமை வாய்ந்த கலாச்சாரத்தை பார்க்கையில், இந்த சமூகத்தைச் சேர்ந்த சக்தி வாய்ந்த மக்கள், மிகப் பழமையான இந்த நடைமுறையை விட்டொழித்து, புதிய நாகரீக முறைக்கு மாறுவார்கள் என்ற நம்பிக்கையால் என் மனம் நிறைகிறது என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai