பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,360 கோடிக்கு  சட்டவிரோத பணப்பரிமாற்றம்

மாநில அரசால் நடத்தப்படும் பஞ்சாப் நேஷனல் வங்கி, தனது மும்பை வங்கிக் கிளையில் ரூ.11,360 கோடிக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,360 கோடிக்கு  சட்டவிரோத பணப்பரிமாற்றம்


மும்பை: மாநில அரசால் நடத்தப்படும் பஞ்சாப் நேஷனல் வங்கி, தனது மும்பை வங்கிக் கிளையில் ரூ.11,360 கோடிக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக தெரிவித்துள்ளது.

மோசடியாக, சட்டப்பூர்வ அங்கீகாரமில்லாத வகையில் மும்பை வங்கிக் கிளையில் இருந்து ரூ.11,360 கோடி அளவுக்கு பணப்பரிமாற்றம் நடந்திருப்பது குறித்து வங்கிப் பணிகள் சீர்திருத்த அமைப்புக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பணப்பரிமாற்றத்தினால், அந்த வங்கிக் கிளையில் கணக்கு வைத்திருந்த ஒரு சிலர் பயனடைந்திருப்பதும், சில வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளில் முன்கூட்டியே பணம் வரவு வைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளதாக வங்கி அறிவித்துள்ளது.

நாட்டில் இரண்டாவது மிகப்பெரிய மாநில அரசு நடத்தும் வங்கியாகவும், மொத்த சொத்து மதிப்பில் 4வது இடத்திலும் இருக்கும் இந்த வங்கியின் கிளையில் நடந்திருக்கும் இந்த சட்டவிரோத பணப்பரிமாற்றத்துக்கு உடந்தையாக இருந்தவர்கள் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com