இந்திய துணைத் தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்

இந்திய துணைத் தூதரை சம்மன் அனுப்பி வரவழைத்து, எல்லையில் இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருப்பதாக பாகிஸ்தான் கண்டனம் 

இந்திய துணைத் தூதரை சம்மன் அனுப்பி வரவழைத்து, எல்லையில் இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருப்பதாக பாகிஸ்தான் கண்டனம் 
தெரிவித்துள்ளது.
இரு நாடுகள் இடையேயான எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் இருக்கும் கோட் கோட்டேரா செக்டார் பகுதியில் இந்திய ராணுவம் கடந்த வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 65 வயது பெண் ஒருவர் பலியாகி விட்டதாகவும் பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரகத்தில் இருக்கும் அந்நாட்டு துணைத் தூதரை (பொறுப்பு) பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சக இயக்குநர் (தெற்காசியா மற்றும் சார்க்) முகமது ஃபைசல் வெள்ளிக்கிழமை சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்தார்.
பின்னர் அவரிடம், எல்லையில் இந்திய ராணுவம் கடந்த 11-ஆம் தேதி அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம்சாட்டி தனது கண்டனத்தை ஃபைசல் தெரிவித்தார். எல்லையில் அமைதி காக்க வேண்டும் என்று பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்ட பின்னரும், இந்தியா தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து இருந்து இந்தியா அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. சுமார் 1900 தாக்குதல்களை இந்தியா இதுவரை நடத்தியுள்ளது என்று ஃபைசல் குறிப்பிட்டார்.
அதேபோல், இந்தியா நடத்தி வரும் தாக்குதல்களால், இப்பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் நீண்டகால பாதிப்புகள் ஏற்படும் என்று இந்திய துணைத் தூதரிடம் ஃபைசல் தெரிவித்தார் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com