மகாத்மா கொலை மறுவிசாரணை: மனுதாரருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

மகாத்மா காந்தி கொலை வழக்கை மறுவிசாரணை செய்யக் கோரி மனு தாக்கல் செய்த நபரிடம் பல்வேறு கேள்விகளை உச்ச நீதிமன்றம் முன்வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய முக்கிய
மகாத்மா கொலை மறுவிசாரணை: மனுதாரருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

மகாத்மா காந்தி கொலை வழக்கை மறுவிசாரணை செய்யக் கோரி மனு தாக்கல் செய்த நபரிடம் பல்வேறு கேள்விகளை உச்ச நீதிமன்றம் முன்வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய முக்கிய ஆதாரங்கள் ஏதேனும் மனுதாரரிடம் உள்ளனவா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பல்வேறு உண்மைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளதாகக் கூறி மும்பையைச் சேர்ந்த மருத்துவர் பங்கஜ் பட்னிஸ் என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். அதனை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பங்கஜ் முறையிட்டார்.
இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக மூத்த வழக்குரைஞர் அமரேந்திர சரண் நியமிக்கப்பட்டார். அவர் தாக்கல் செய்த அறிக்கையில், மகாத்மா காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தச் சூழ்நிலையில், அந்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மனுதாரருக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய சாட்சியங்களில் ஏறத்தாழ அனைவருமே இறந்து விட்டதாகத் தெரிவித்த நீதிபதிகள், மகாத்மா கொலை தொடர்பாக புதிய ஆதாரங்கள் ஏதேனும் மனுதாரரிடம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினர்
மேலும், சட்டவிதிகளின்படியே உச்ச நீதிமன்றம் செயல்படும் என்று தெரிவித்த அவர்கள், நாட்டின் போற்றுதலுக்குரிய தலைவரின் கொலை வழக்கு என்பதற்காக அவசியமின்றி அதனை விசாரிக்க முடியாது என்றனர்.
இதைத் தொடர்ந்து, அமரேந்திர சரணின் அறிக்கைக்குக்கு பதிலளிக்க மனுதாரருக்கு நீதிபதிகள் 4 வாரங்கள் அவகாசம் அளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com