ஆந்திர மாநிலம் குறித்து நீதி ஆயோக் துணைத் தலைவர் கருத்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு வேதனை

ஆந்திர மாநிலம் குறித்து நீதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ள கருத்து மிகுந்து வேதனையும், வருத்தத்தையும் அளிப்பதாக அந்த மாநில முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் குறித்து நீதி ஆயோக் துணைத் தலைவர் கருத்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு வேதனை

ஆந்திர மாநிலம் குறித்து நீதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ள கருத்து மிகுந்து வேதனையும், வருத்தத்தையும் அளிப்பதாக அந்த மாநில முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
முன்னதாக, ஆந்திர மாநிலத்தில் ஆய்வு நீதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 'ஆந்திரம் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் தேசிய சராசரியைவிட அதிகமாக உள்ளது. எனவே, தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டதற்காக மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி உதவியை எதிர்பார்ப்பதும், மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் கேட்பதும் முறையானது அல்ல. இது தொடர்பாக சற்று சிந்திக்க வேண்டும்' என்றார்.
இந்நிலையில், அமராவதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு கூறியதாவது:
நீதி ஆயோக் துணைத் தலைவர் ஆந்திர மாநிலம் குறித்து பேசிய செய்தியை பத்திரிகையில் படித்தேன். அது எனக்கு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. மேலும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக் கூடாது என்று கூறியுள்ளார். அவரது பேச்சும் வேதனை தருவதாக உள்ளது.
ஆந்திரத்துக்கு கூடுதலாக எதையும் நாம் கேட்கவில்லை. புதிதாக உருவான மாநிலத்துக்கு போதிய வாய்ப்புகளை உருவாக்கித் தருவதன் மூலம்தான் தேசத்தின் வளர்ச்சியில் அந்த மாநிலம் சிறப்பான பங்களிப்பைத் தரமுடியும். மத்திய அரசிடம் கூட ஒரு சில முறைதான் கோரிக்கை விடுக்க முடியும். இல்லையென்றால் உச்ச நீதிமன்றத்தை அணுகி மாநிலப் பிரிவினையின்போது ஆந்திரத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைத் தெரிவிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
மற்ற மாநிலங்களுக்கு இணையாக ஆந்திரமும் வளர்ச்சி அடைய, கடுமையாக உழைப்பதற்கு மாநில மக்கள் தயாராக உள்ளனர். இதற்கு மத்திய அரசு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் சந்திரபாபு நாயுடு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com