இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது: குடியரசுத் தலைவர் வழங்கினார்

இசைஞானி இளையராஜாவுக்கு 2018-ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கௌரவித்தார். 
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை வழங்கி கௌரவிக்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். 
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை வழங்கி கௌரவிக்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். 

இசைஞானி இளையராஜாவுக்கு 2018-ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கௌரவித்தார். 
தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் 2018ஆம் ஆண்டு பத்ம விருதுகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு, இளையராஜா, கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா தலைவர் பி. பரமேஸ்வரன், ஹிந்துஸ்தானி பாடகர் குலாம் முஸ்தபா கான் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகளை அளித்து கௌரவித்தார்.
கேரள மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற மேர் தோமா சிரியன் தேவாலய பிஷப் பிலிப்போஸ் மேர் கிறிஸிúஸாஸ்தம், வரலாற்று ஆய்வாளரும், தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணருமான ராமச்சந்திரன் நாகசுவாமி, சட்ட நிபுணர் வேத பிரகாஷ் நந்தா, ஹிந்துஸ்தானி இசையமைப்பாளரும், சிதார் கலைஞருமான பண்டிதர் அரவிந்த் பாரிக் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்.
கான்பூர் ஐஐடி முன்னாள் மாணவர் அரவிந்த் குப்தா, கேரளத்தைச் சேர்ந்த லட்சுமிகுட்டி, டென்னிஸ் வீரர் சோம்தேவ் கிஷோர் தேவ்வர்மன், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஏழைப் பெண் சுபாஷினி மிஸ்திரி, தமிழகத்தில் பிளாஸ்டிக் சாலைகளை உருவாக்கிய பெருமைக்கு சொந்தக்காரரான ராஜகோபாலன் வாசுதேவன், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 98 வயது யோகா பயிற்சி நிபுணர் நானம்மாள், காஷ்மீர் நாடகக் கலைஞர் பிரன் கிஷோர் கௌல், கர்நாடகத்தைச் சேர்ந்த சுலகட்டி நரசம்மா உள்ளிட்டோருக்கும் பத்ம ஸ்ரீ விருதுகளை ராம்நாத் கோவிந்த் அளித்தார்.
இந்த விழாவில், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் 43 பேருக்கு பத்ம விருதுகள் அளிக்கப்பட்டன. எஞ்சியோருக்கு வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் அளிக்கவுள்ளார். ஆண்டுதோறும் குடியரசுத் தினத்தையொட்டி, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2018ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு 84 பேரின் பெயர்கள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதில் 3 பத்ம விபூஷண் விருதுகள், 9 பத்ம பூஷண் விருதுகள், 72 பத்ம ஸ்ரீ விருதுகள் ஆகும். ஏழைகளுக்கு சேவை செய்தோர், இலவச பள்ளிகளை அமைத்து தந்தோர், பழங்குடியின கலைகளை உலகறியச் செய்தோர் உள்பட பல சாதனைகளை நிகழ்த்தியோருக்கு முக்கியத்துவம் அளித்து இந்த ஆண்டு மத்திய அரசு விருதுகளை அறிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com