நாடாளுமன்றத்தில் நேருவுக்கு தலைவர்கள் மரியாதை

முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்த தினத்தை ஒட்டி, தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு தலைவர்கள் புதன்கிழமை மலர் தூவி மரியாதை செய்தனர்.
ஜவாஹர்லால் நேருவுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நெறிகள் குழுத் தலைவர் எல்.கே. அத்வானி, மக்களவை உறுப்பினர் சோனியா காந்தி
ஜவாஹர்லால் நேருவுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நெறிகள் குழுத் தலைவர் எல்.கே. அத்வானி, மக்களவை உறுப்பினர் சோனியா காந்தி

முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்த தினத்தை ஒட்டி, தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு தலைவர்கள் புதன்கிழமை மலர் தூவி மரியாதை செய்தனர். நாடாளுமன்ற மைய அரங்கில் வைக்கப்பட்டுள்ள ஜவாஹர்லால் நேருவின் ஆளுயர திருவுருவப் படத்துக்கு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் மூத்த நாடாளுமன்றவாதிகள் மலர் தூவி மரியாதை செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் விஜய் கோயல், பொது கணக்குகள் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் துணைப் பிரதமரும், நெறிகள் குழுத் தலைவருமான எல்.கே. அத்வானி, மக்களவை உறுப்பினர் சோனியா காந்தி மற்றும் இன்னாள், முன்னாள் உறுப்பினர்கள் பங்கேற்றனர். 
மக்களவை, மாநிலங்களவையின் தலைமைச் செயலர்கள் ஸ்நேகலதா ஸ்ரீவாஸ்தவா, தேஷ் தீபக் வர்மா ஆகியோர் மலர் மரியாதை செய்தனர். 
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பண்டித ஜவாஹர்லால் நேருவின் வரலாறு குறித்து மக்களவை செயலகம் மூலம் ஹிந்தி, ஆங்கில மொழிகளில் வெளியிடப்பட்ட கையேடுகள் வழங்கப்பட்டன.
நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் பண்டித ஜவாஹர்லால் நேருவின் உருவப்படம் 1966-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் மூலம் திறந்துவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com