'வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி'- வாட்ஸ்ஆப் செயல் அதிகாரியுடன் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேச்சுவார்த்தை

வாட்ஸ்ஆப் செயலியின் செயல் அதிகாரி கிறிஸ் டேனியல்ஸ் உடன் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், செவ்வாய்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.
'வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி'- வாட்ஸ்ஆப் செயல் அதிகாரியுடன் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேச்சுவார்த்தை

வாட்ஸ்ஆப் செயலியின் செயல் அதிகாரி கிறிஸ் டேனியல்ஸ் உடன் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், செவ்வாய்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.

வாட்ஸ்ஆப் செயலியில் தொடர்ந்து பகிரப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடைபெற்ற இப்பேச்சுவார்த்தை குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கிறிஸ் உடனான இச்சந்திப்பு மிகவும் திருப்திகரமாக அமைந்தது. இந்தியாவில் ஏற்பட்டு வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் வாட்ஸ்ஆப் மூலமாக கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்டவை தொடர்பாகவும், கேரள வெள்ளம் தொடர்பாகவும் நடைபெற்ற தகவல் பரிமாற்றங்கள் நன்மை அளிக்கும் வகையில் இருந்ததாக தெரிவித்துள்ளேன். 

இருப்பினும், வாட்ஸ்ஆப் செயலியால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கியுள்ளேன். குறிப்பாக சமீபகாலங்களில் தவறான தகவல் பரிமாற்றங்களால் மக்கள் கொல்லப்படுவது, ஆபாசங்களை பரப்புவது உள்ளிட்டவைகளால் ஏற்பட்டுள்ள சீர்கேடு அச்சத்தை ஏற்படுத்துகிறது, இதுகுறித்து விவாதித்துள்ளேன். 

இந்தியாவில் வாட்ஸ்ஆப் நுகர்வோர்களின் குறைகேட்பு மையம் ஏற்படுத்திட வேண்டும். அப்போதுதான் இந்திய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அது செயல்பட முடியும். வாட்ஸ்ஆப் காரணமாக இந்தியாவில் ஏற்படும் சிக்கல்களுக்கு அமெரிக்காவில் இருந்து தீர்வு கூறுவதை நாங்கள் விரும்பவில்லை. மேலும் இந்தியாவில் வாட்ஸ்ஆப் பயன்பாடு தவிர்க்க முடியாததாகி விட்டது. எனவே இச்செயலிக்கென இந்தியாவில் பிரத்தியேக நிர்வாகம் அமைக்கப்பட வேண்டும்.

மேலும் வாட்ஸ்ஆப் மூலமாக வதந்தி பரப்புவோரை அடையாளம் காணும் விதம் தொழில்நுட்பத்தை வடிவமைக்க கோரிக்கை வைத்துள்ளோம். இதற்கான தீர்வுகளை விரைவில் ஏற்படுத்துவதாக அவர்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வாட்ஸ்ஆப் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

இந்தியாவில் மட்டும் 200 மில்லியன் மக்கள் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் உலகளவில் இந்தியாவில் தான் வாட்ஸ்ஆப் பயன்பாடு அதிகம் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக செய்தி, புகைப்படம், காணொளி உள்ளிடவை அதிகம் பகிரப்படுகிறது. 

சமீபகாலங்களில் பரப்பப்படும் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த பாதிப்பு காரணமாக ஒரு பகுதியைச் சேர்ந்தவர்கள் கூட்டாக சேர்ந்து ஒருவரை அடித்துக்கொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஜூலை 20-ஆம் தேதி வாட்ஸ்ஆப் செயலியின் பயன்பாட்டில் பிறருக்கு அனுப்பும் தகவல்களில் இந்தியவுக்கு மட்டும் சில கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com