ஜம்மு காஷ்மீரில் இதுவரை 225 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்: ராணுவ அதிகாரி தகவல்

ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டில் இதுவரை 225 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என வடக்கு இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல்
ஜம்மு காஷ்மீரில் இதுவரை 225 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்: ராணுவ அதிகாரி தகவல்


பஞ்சாப்: ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டில் இதுவரை 225 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என வடக்கு இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ரன்பீர் சிங் தெரிவித்துள்ளார். 

அண்டை நாடான பாகிஸ்தான் ராணுவத்தினர் மற்றும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து மத்திய அரசு தொடர்ந்து பாதுகாப்பு படை மூலம் அப்பகுதியில் அமைதி ஏற்படுத்த பல்வேறு வழிகளில் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
 
இந்நிலையில், வடக்கு பிராந்திய கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ரன்பீர் சிங் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அரசு மற்றும் பாதுகாப்பு படையினர் எடுத்த நடவடிக்கை காரணமாக பயங்கரவாத அமைப்புகளில் இளைஞர்கள் இணைவது குறைந்துள்ளது. ஏராளமான பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 225 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முடிய இன்னும் சில நாட்கள் உள்ளன. பயங்கரவாதிகள் குறித்து உள்ளூர் மக்கள் அளித்து வருகின்றனர். இது ஒரு நல்ல செய்தியாகும். 

ஜம்மு காஷ்மீரில் அமைதி மற்றும் நிலைத்தன்மை நிலவுவதை உறுதி செய்வோம். இந்தியாவில் ஜம்மு காஷ்மீரை தாண்டி பயங்கரவாதத்தை பரப்ப பாகிஸ்தான் முயற்சி செய்கிறது. இதனை தடுக்க ராணுவம் தொடர்ந்து முயற்சி செய்யும்.

மத்திய அரசு மற்றும் பாதுகாப்பு படையினர் எடுத்த பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளால் கடந்த சில மாதங்களாக பயங்கரவாத அமைப்புகளில் இளைஞர்கள் சேர்வது வெகுவாக குறைந்துள்ளது.

மேலும், காஷ்மீரில் அமைதி மற்றும் நிலைத்தன்மை நிலவுவதை உறுதி செய்வோம். இந்தியாவில் காஷ்மீரை தாண்டி பயங்கரவாதத்தை பரப்ப பாகிஸ்தான் முயற்சி செய்கிறது. இதனை தடுக்க ராணுவம் தொடர்ந்து முயற்சி செய்யும் என்று கூறினார் ரன்பிர் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com