வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை: ஜுவாலா கட்டா ஏமாற்றம்

தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களிக்கச் சென்ற பிரபல பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா, அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று கூறியதால்
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை: ஜுவாலா கட்டா ஏமாற்றம்


தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களிக்கச் சென்ற பிரபல பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா, அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று கூறியதால் ஏமாற்றத்துடன் திரும்பினார்.
தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஹைதராபாத் நகரில் வசித்து வரும் ஜுவாலா கட்டா, பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு காலையில் வாக்களிக்கச் சென்றார். அவரிடம் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால், அவர் வாக்களிக்க முடியாது என்று தேர்தல் அலுவலர்கள் கூறிவிட்டனர். இதனால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய ஜுவாலா, இது தொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு மாதத்துக்கு முன் இணையதளத்தில் பார்த்தபோது எனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தது. ஆனால், தேர்தலில் வாக்களிக்கச் சென்றபோது எனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று கூறிவிட்டனர். ஆர்வத்துடன் வாக்களிக்கச் சென்ற எனக்கு இது பெரும் ஏமாற்றமாக உள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக ஹைதராபாதில் ஒரே வீட்டில்தான் வசித்து வருகிறேன். எங்கள் வீட்டில் நான் எனது பெற்றோர் மற்றும் சகோதரி என நான்கு வாக்காளர்கள் உள்ளனர். இதில் தாயார் மட்டுமே வாக்களிக்க முடிந்தது. மற்ற மூவரது பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று கூறி வாக்களிக்க அனுமதிக்கவில்லை. இது எவ்வாறு நடந்தது என்பது தெரியவில்லை. ஒரே வீட்டில் இருக்கும் நால்வரில் ஒருவருக்கு மட்டும்தான் வாக்கு உள்ளது என்று கூறுவது எப்படி என்று தெரியவில்லை. இது தொடர்பாக சம்பந்தபட்ட தேர்தல் ஆணைய அலுவலரிடம் புகார் அளிக்க இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
பாட்மிண்டன் போட்டியில் சர்வதேச அளவில் காமன்வெல்த் போட்டி உள்பட 7 பதக்கங்களை ஜுவாலா கட்டா வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com