பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதே நிர்பயாவுக்கு செய்யும் அஞ்சலி

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுதான் நிர்பயாவுக்கு நாம் செய்யும் சிறப்பான அஞ்சலி என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். 
பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதே நிர்பயாவுக்கு செய்யும் அஞ்சலி

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுதான் நிர்பயாவுக்கு நாம் செய்யும் சிறப்பான அஞ்சலி என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். 

கடந்த 2012-ஆம் ஆண்டு, டிசம்பர் 16-ஆம் தேதி நள்ளிரவில் தில்லி முனிர்கா பகுதியில் ஓடும் பேருந்தில் 23 வயது துணை மருத்துவ மாணவி நிர்பயா ஐந்து இளைஞர்கள் மற்றும் சிறுவரால் கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இச்சம்பவத்திற்குப் பிறகு மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் டிசம்பர் 29-ஆம் தேதி உயிரிழந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பொதுமக்களிடையே கடும்  கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து பாலியல் பலாத்கார சட்டங்கள் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டன. இது தொடர்பாக கைதானவர்களில் ராம் சிங் என்பவர் சிறைக்குள்ளேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சிறார் குற்றவாளியான மற்றொரு நபர், அதிகபட்ச தண்டனையாக 3 ஆண்டுகளுக்குப்பிறகு விடுதலை செய்யப்பட்டார். மற்ற நான்கு குற்றவாளிகளான அக்ஷய் குமார் சிங், முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை தில்லி உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உறுதி செய்தன. இதில் அக்ஷய் தவிர்த்த மற்ற மூவரும் உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. 

இந்நிலையில், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த நிகழ்வின் 6-வது நினைவு தினம் நாடுமுழுவதும் ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. 

இதையொட்டி, முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில், "6 ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில் தில்லி வரலாற்றில் மிக மோசமான குற்றச் செயல்களில் ஒன்று நடைபெற்றது. எவ்வித இடையூறுகள் வந்தாலும், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுதான் நிர்பயாவுக்கு நாம் செலுத்தும் மிகச் சிறந்த அஞ்சலியாக இருக்கும்' என்று தெரிவித்துள்ளார்.

"பெண்கள் தங்களை பலவீனமாக கருதக் கூடாது'

நிர்பயாவின் தாய் ஆஷா தேவி ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், "இதுபோன்ற கிரிமினல் வழக்கில் தொடர்புடைய நபர்கள் இன்னும் உயிருடன் உள்ளனர். இது சட்டம், ஒழுங்கு சூழல் தோல்வியைக் காட்டுகிறது. பெண்கள் தங்களை பலவீனமானவர்களாக கருதக் கூடாது. பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதை விட்டுவிடக் கூடாது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com