ஓரினச்சேர்க்கைக்கு எதிரான பிரிவு 377: வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் சம்மதம்

ஓரினச்சேர்க்கையை சட்ட விரோதமாக கருதும் இந்திய தண்டனைச் சட்டம் 377-வது பிரிவை நீக்குமாறு ஐஐடி மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் சம்மதம் தெரிவித்தது.  
ஓரினச்சேர்க்கைக்கு எதிரான பிரிவு 377: வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் சம்மதம்

ஓரினச்சேர்க்கையை சட்ட விரோதமாக கருதும் இந்திய தண்டனைச் சட்டம் 377-வது பிரிவை நீக்குமாறு ஐஐடி மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் சம்மதம் தெரிவித்தது. 

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377-இன் படி ஓரினச்சேர்க்கை குற்றமாகும். இந்தச் சட்டத்தை எதிர்த்து ஐஐடியைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் உட்பட 20 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் இந்திய தண்டனைச் சட்டம் 377-வது பிரிவு, இந்திய அரசியலமைப்பின் பிரிவுகள் 14, 15, 16, 19 மற்றும் 21 ஆகியவற்றிற்கு எதிரானதாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று ஏற்றுக்கொண்டது. ஆனால், மனு மீதான விசாரணை எந்த தேதியில் நடைபெறும் என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை.             

இந்திய தண்டனைச் சட்டம் 377

ஓரினச்சேர்க்கை மற்றும் இயற்கைக்கு முரணான பாலுறவுகள், இந்திய தண்டனைச் சட்டம் 377 பிரிவின் படி தண்டனைக்குரிய குற்றமாகும். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376-இன் படி பாலியல் வல்லுணர்வுக்கு வழங்கபப்படும் தண்டனைகள் ஓரினச்சேர்க்கைக்கும் பொருந்தும் என்ற வகையில் இருந்தது. 

முன்னதாக 2009ம் ஆண்டில், ஓரினச்சேர்க்கை குற்றம் இல்லை என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியது. பின்னர், 2013ல் உச்ச நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்து ஓரினச்சேர்க்கை மீண்டும் தண்டனைக்குரிய குற்றமாக கருதியது.  

பின்னர், 2013ல் வழங்கிய தீர்ப்பை மறுபரீசிலனை செய்வதாக உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் முடிவு செய்தது. 

இதையடுத்து, கடந்த மாதம் ஹோட்டல் அதிபர் கேஷவ் சூரி என்பவரும் ஓரினச்சேர்க்கையை சட்ட விரோதமாக கருதக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். 

இந்த வரிசையில் கடந்த திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட ஐஐடி மாணவர்களின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com