தீபாவளி எதிரொலி: தில்லியில் சுவாசிக்கத் தகுதியற்றதாக மாறிய காற்றின் தரம்

தீபாவளியின் எதிரொலி காரணமாக தில்லியில் சுவாசிக்கத் தகுதியற்றதாக காற்றின் தரம் மாறியுள்ளது. 
தீபாவளி எதிரொலி: தில்லியில் சுவாசிக்கத் தகுதியற்றதாக மாறிய காற்றின் தரம்


புது தில்லி: தீபாவளியின் எதிரொலி காரணமாக தில்லியில் சுவாசிக்கத் தகுதியற்றதாக காற்றின் தரம் மாறியுள்ளது. 

குறிப்பாக தில்லி பல்கலை அமைந்திருக்கும் வடக்கு பகுதியில் காற்றில் பி.எம். 2.5 நுண்துகள் மாசு அளவு இன்று 2,000 ஆக பதிவானது. இந்த நுண் துகள் பிஎம் 10 நுண் துகளை விட அதிகமாக இருந்தால் அது உடலுக்கு மிகவும் தீங்கிழைப்பதாகும்.

தீபாவளியால் பல பகுதிகளில் பட்டாசுகள் வெடித்ததால் ஏற்கனவே மாசடைந்திருந்த காற்று மேலும் மாசடைந்தது.

பல பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. ஒரு சில பகுதிகளில் மோசம் என்றும், சில பகுதிகளில் படுமோசம் என்றும் காற்றின் தரம் பதிவாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com