தெலங்கானாவுக்கு எதிராக சதிச் செயல்களில் ஈடுபடுகிறார் சந்திரபாபு நாயுடு: டிஆர்எஸ்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா மாநிலத்தின் நலன்களுக்கு எதிராக சதிச் செயல்களில் ஈடுபடுவதாக தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா மாநிலத்தின் நலன்களுக்கு எதிராக சதிச் செயல்களில் ஈடுபடுவதாக தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
 இதுகுறித்து அக்கட்சித் தலைவரும், தெலங்கானா அமைச்சருமான டி. ஹரிஷ் ராவ், சந்திரபாபு நாயுடுவுக்கு பொதுவில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தெலங்கானாவுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு துரோகம் செய்துவிட்டதாக 19 விவகாரங்களை குறிப்பிட்டுள்ளார்.
 இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
 நீர்ப்பாசனம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா மாநிலத்தின் நலன்களுக்கு எதிராகச் செயல்படுகிறார். அவர் எப்போதுமே தெலங்கானா மாநிலம் உருவானதற்கும், அந்த மாநில மக்களுக்கும் எதிராகவே இருக்கிறார். தெலங்கானாவின் வளர்ச்சியை அவரால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை.
 காலேஸ்வரம், பாலமுரு-ரங்கா ரெட்டி, தின்டி உள்ளிட்ட தெலங்கானா மாநில நீர்ப்பாசன திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சந்திரபாபு நாயுடு, தெலங்கானாவுக்கு கிருஷ்ணா நதி நீர் தருவதற்கும், பொலாவரம் திட்டத்துக்கும் மறுப்பு தெரிவித்து வருகிறார். அதேபோல், சிலேரு மின் உற்பத்தி நிலையத்திலிருந்து தெலங்கானா மாநிலத்துக்கான மின்சாரப் பங்கை தர மறுக்கும் அவர், ஆந்திர மாநிலத்தில் சட்டவிரோத நீர்ப்பாசன திட்டங்களை கட்டமைத்து வருகிறார்.
 தற்போது காங்கிரஸ்-தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளின் மாபெரும் கூட்டணியானது, ஆட்சிக்கு வந்தால் தெலங்கானாவின் நலன்கள் பாதிக்கப்படும் என்று ஹரிஷ் ராவ் கூறினார்.
 காங்கிரஸ் பதிலடி: இதற்கு பதிலளித்து தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் உத்தம் குமார் ரெட்டி கூறுகையில், "தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியானது, காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கட்சிகளின் கூட்டணியில் கவனம் செலுத்தவதற்கு பதிலாக, மாநில அரசின் செயல்பாடுகளில் கவனம் செலுத்தலாம்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com