சத்தீஸ்கரில் 65 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்: பாஜகவினருக்கு அமித் ஷாஅறிவுரை

சத்தீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்தலில் 65 தொகுதிகளில் பாஜகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கட்சியின் தலைவர் அமித் ஷா, தொண்டர்களை கேட்டுக் கொண்டார்.
சத்தீஸ்கரில் 65 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்: பாஜகவினருக்கு அமித் ஷாஅறிவுரை

சத்தீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்தலில் 65 தொகுதிகளில் பாஜகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கட்சியின் தலைவர் அமித் ஷா, தொண்டர்களை கேட்டுக் கொண்டார்.
 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப் பேரவைக்கு அடுத்த மாதம் 12, 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பாஜக செயல் வீரர்கள் கூட்டம், ராய்ப்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமித் ஷா பேசியதாவது: 10 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்ட பாஜக, தற்போது 11 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய கட்சியாக பரிணமித்துள்ளது.
 பாஜகவுக்கு 1,800 எம்எல்ஏக்களும், 330 எம்.பி.க்களும் உள்ளனர். 19 மாநிலங்களில் பாஜகவின் ஆட்சி நடைபெறுகிறது. மத்தியிலும் பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சியில் உள்ளது.
 நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் பாஜகவின் கொடி பட்டொளி வீசி பறக்கிறது. இந்த பெருமை அனைத்தும் கட்சியின் தொண்டர்களையே சாரும்.
 கட்சிக்காக, லட்சக்கணக்கான தொண்டர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். தமிழகம், கேரளம், மேற்கு வங்கத்தில் கட்சித் தொண்டர்களின் தியாகம் இன்னும் தொடர்கிறது.
 நீண்ட நெடிய போராட்டத்துக்கு கிடைத்த பலனாக, வெற்றியின் உச்சத்தை பாஜக எட்டியுள்ளது. தமிழகம், தெலங்கானா, கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இன்னும் பாஜகவின் ஆட்சி மலரவில்லை என்பதால், இதை வெற்றியாகக் கருத முடியவில்லை.
 சத்தீஸ்கரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் 65 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும். அதை உறுதிசெய்யும் வகையில் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று அமித் ஷா கூறினார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com