சபரிமலை விவகாரம்: கேரள டிஜிபியுடன் ஆளுநர் அவசர ஆலோசனை

சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள டிஜிபியுடன் ஆளுநர் சதாசிவம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 
சபரிமலை விவகாரம்: கேரள டிஜிபியுடன் ஆளுநர் அவசர ஆலோசனை

சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள டிஜிபியுடன் ஆளுநர் சதாசிவம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

சபரிமலைக்கு இன்று காலை ஆந்திராவை சேர்ந்த செய்தியாளர் கவிதா, பெண்ணியவாதி ரஹானா பாத்திமா ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டு சென்றனர். இருவரும் சன்னிதானத்தின் கீழ்ப்பகுதியான நடைப்பந்தலை நெருங்கியதும் பெண்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சன்னிதானம் முன் பக்தர்கள் முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து பேராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் சபரிமலைக்குள் பெண்களை அனுமதிக்க பக்கதர்கள் மறுத்துவிட்டனர். நிலைமையை உணர்ந்த கேரள அரசு, சபரிமலையில் சன்னிதானத்தை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப உத்தரவிட்டது. இதனால் சபரிமலை சன்னிதானத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த நிலையில் சபரிமலை நிலவரம் குறித்து கேரள டிஜிபி கேலாக்நாத் பெகராவுடன் ஆளுநர் சதாசிவம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சபரிமலையில் பெண்களை அனுமதிக்க மறுத்து பக்தர்கள் போராட்டம் நடத்தும் நிலையில் ஆளுநர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com