இந்திய விமானப் படை பணிக்கான தேர்வில் முறைகேடு: இருவர் கைது

இந்திய விமானப் படையின் அதிகாரி பணிக்கு நடைபெற்ற ஆன்லைன் தேர்வில் முறைகேடு செய்ததாக ஹரியாணா மாநிலம், ரோத்தக் பகுதியைச் சேர்ந்த இருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய விமானப் படையின் அதிகாரி பணிக்கு நடைபெற்ற ஆன்லைன் தேர்வில் முறைகேடு செய்ததாக ஹரியாணா மாநிலம், ரோத்தக் பகுதியைச் சேர்ந்த இருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
 இது குறித்து ரோத்தக் பகுதி காவல் துறையினர் தெரிவித்ததாவது:
 இந்திய விமானப்படையின் அதிகாரிக்கான ஆன்லைன் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ரோத்தக் பகுதியின் தேர்வு மையம் ஒன்றில் 5 கணினிகளை முடக்கி, சிலர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
 அந்தத் தேர்வு மையத்துக்கு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து கணினிகளை முடக்கிய அந்த நபர்கள், நிபுணர்களின் உதவியுடன் தேர்வை எழுதினர்.
 அதே வேளையில், தேர்வு மையத்தில் இருந்த முடக்கப்பட்ட கணினியில் இருந்த தேர்வர்கள், தேர்வு எழுதுவது போல் நடித்துள்ளனர்.
 அரசின் சார்பாக இந்தத் தேர்வை நடத்திய தனியார் நிறுவனத்தின் உதவியுடன், இந்த மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 இதையடுத்து, இந்த முறைகேடு தொடர்பாக அந்த நிறுவனத்தைச் சேர்ந்த தேர்வு கண்காணிப்பாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
 அவர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், ஒவ்வொரு தேர்வர்களிடமிருந்தும் ரூ. 3.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை பெற்றுக்கொண்டு, அந்த நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
 மேலும் பலர் இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com