வாராணசியில் மோடி நாளை வேட்பு மனு தாக்கல்: இன்று பிரமாண்ட பேரணி

மக்களவைத் தேர்தலில் வாராணசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, அத்தொகுதியில் வெள்ளிக்கிழமை (ஏப்.26) வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
வாராணசியில் மோடி நாளை வேட்பு மனு தாக்கல்: இன்று பிரமாண்ட பேரணி

மக்களவைத் தேர்தலில் வாராணசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, அத்தொகுதியில் வெள்ளிக்கிழமை (ஏப்.26) வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இதையொட்டி, வாராணசியில் பிரதமர் மோடி வியாழக்கிழமை பிரமாண்ட பேரணி செல்கிறார்.
வாராணசியில் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் உள்ள அந்த பல்கலைக்கழக நிறுவனரான மறைந்த மதன் மோகன் மாளவியா சிலைக்கு முதலில் மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதையடுத்து, சாலை மார்க்கமாக மோடி பிற்பகல் 3 மணிக்கு பேரணி செல்கிறார்.
வாராணசியில் உள்ள தாசாஸ்வமேத் நதிமுகத்துவார பகுதி வரை பேரணி நடைபெறுகிறது. இந்தப் பேரணியில் பாஜக மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதையடுத்து கங்கை நதியில் ஆரத்தி எடுத்து மோடி வழிபாடு நடத்துகிறார்.
இதன்பின்னர் வாராணசி தொகுதி தேர்தல் அதிகாரியிடம் மோடி வெள்ளிக்கிழமை வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். இதையொட்டி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஹோட்டலில் பாஜக தொண்டர்களுடன் காலையில் மோடி ஆலோசனை நடத்துகிறார். பின்னர் கால பைரவர் கோயிலில் வழிபாடு நடத்துகிறார். 
இந்த வழிபாட்டை முடித்துக் கொண்டு, வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்ய செல்கிறார். அப்போது பாஜக கூட்டணியின் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில், மோடியுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமார், சிரோமணி அகாலிதளம் தலைவரான பிரகாஷ் சிங் பாதல், லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான், மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், பியூஸ் கோயல், ஜே.பி. நட்டா, நிதின் கட்கரி உள்ளிட்டோரும் உடன் வரவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com